பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு திரையுலகில் காமெடியனாகவும், ஹீரோவாகவும் வெற்றிகளை குவித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி இருந்தாலும் வடிவேலுவுடன் நடித்த சக நடிகர், நடிகைகள் அவரை பற்றிய சில விஷயங்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். இதற்கு வடிவேலு ஆரம்பத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவி ல் லை.
ஆனாலும் ஒரு பேட்டி ஒன்றில் தன்னை வி மர்சித்த நடிகர் குறித்து பேசி உள்ளார். அதில் அவர் சொன்னது.. என்னை விமர்சித்தவர்களின் நிலைமையை நானும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்றும், சிலர் இ ல் லாமல் போய் விட்டார்கள் சிலர் சுகர் வந்து கால் விரல்களை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது பூதாகரமாக வெ டி த்தது. இந்த நிலையில் வடிவேலுவை பற்றி பிரபல நடிகை ஒருவர் பேசியுள்ளார். அவர் வேறு யாரும் அல்ல.. நடிகை தேவி ஸ்ரீ தான்.. இவர் வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சரத்குமார் நடித்த அரசு படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இவர் அண்மையில் அசுரன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் நடித்திருந்தாராம். அதன் பிறகு விவேக்குடன் இரண்டு படங்களில் கமிட்டாகி இருந்தாராம். இதைத் தெரிந்து கொண்ட வடிவேலு அதன் பிறகு அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு தரவே இ ல் லை ஒரு தடவை வாய்ப்புக்காக வடிவேலு சாரிடம் நான் பேசினேன். அப்பொழுது யாரோ தெரியாதவர் போல் பேசினார்.
அதன் பிறகு இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் உங்களுடன் நடித்திருக்கிறேன் என்று சொன்னேன் அதன் பிறகு ஓ குண்டச்சியா எனக் கேட்டார். ஆம் என்று சொன்னதும் சரி சரி ஏதாவது வாய்ப்பு இருந்தால் சொல்கிறேன் என்று கூறி விட்டு செல்ஃபோனை வைத்து விட்டார். அதன் பிறகு வடிவேலு பற்றி எல்லா விவரங்களும் தனக்குத் தெரியும் என தேவி ஸ்ரீ கூறினார். முதலில் அவரை நல்ல விதமாக தான் நினைத்திருந்தேன் என்றும், இப்பொழுது அவர் நடந்து கொண்டிருக்கும் விதம் என்னை கொஞ்சம் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது எனக் கூறினார்.