குழந்தைகள் பிறந்தது முதல் அவர்களின் எதிர்காலம் சிறப்புற வேண்டி அயராது உழைக்கும் தந்தைக்கு பெருமை சேர்ப்பது குழந்தைகளின் ஒழுக்கம், மேற்படிப்பில் வாங்கும் பட்டம். மாணவர்கள் தங்கள் பள்ளி படிப்பை முடித்ததும் உயர்க்கல்வியை 4 முதல் 5 ஆண்டுகள் கற்கிறார்கள். இதன் பிறகு அநேக மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கும் இல்லாது தங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாவது மாணவர்களின் கல்வி.
உயர் கல்வியை அரும்பாடு பட்டு படிக்க வைக்கும் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பது மாணவர்களின் பட்டம். கல்லூரி படிப்பை முடித்து அவர்களை கௌரவிக்கும் பொருட்டு நடத்தப்படும் பட்டமளிப்பு விழா ஒவ்வொரு மாணவரின் கனவாகும். சிலரது குடும்பங்களில் தங்கள் தலைமுறையில் முதல் பட்டதாரியான மகன் அல்லது மகள் மூலம் அந்த குடும்பத்தினருக்கு பெருமை கிடைக்கும். அவர்கள் பெற்ற பட்டத்தினை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி கௌரவிப்பார்கள். மேலும் ஊரார் உறவினர்களிடம் கூறி பெருமைப்பட்டு கொள்வார்கள். தங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாக இருக்கும் குழந்தைகள் பெற்றோருக்கு சிறந்த குழந்தைகளாக இருப்பார்கள்.
காவலர் ஒருவரின் மகள் தான் பெற்ற பட்டத்தையும், அங்கியையும், மற்றும் மெடலையும் தந்தைக்கு அணிவித்து அழகு பார்க்கிறார். இதனால் மகிழ்ச்சியில் திக்கு முக்கியாடிய தந்தை பெருமையோடு ஏற்று கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…அந்த காணொலி காட்சிகளை இங்கே காணலாம்….