2022 சனி பெயர்ச்சி : உக்கிர சனி கூரைய பிச்சிட்டு கொடுக்கும்….கோடீஸ்வரராகும் ஒரே ஒரு ராசி

ஏப்ரல் 29ம் திகதி மகரத்திலிருந்து சனி கும்பத்திற்கு செல்ல உள்ளார்.

இந்த சனி அதிசார பெயர்ச்சியால் அவரின் கெடுபார்வையிலிருந்து விலகக்கூடிய ராசியினர் திடீர் அதிர்ஷ்டமும், கோடீஸ்வர யோகமும் பெற உள்ளனர்.

எந்த ராசியினர் எல்லாம் நற்பலன் பெறுவார்கள். எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

​மேஷம்

சனி பகவான் தொழில் ஸ்தானத்திலிருந்து, லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். தொழில், வியாபாரம், உத்தியோகம் சார்ந்த விஷயங்களில் நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கும்.

புதிய தொழில் தொடங்குதல், தொழில் விரிவாக்கம், புதிய கிளை தொடங்குதல் என எந்த ஒரு முயற்சிக்கும் மிகவும் சாதகமான காலமாக இருக்கும்.

கால சர்ப்ப தோஷம் என்பது என்ன? இந்த பரிகாரங்களை செய்தால் பலன் கிடைக்கும்
​மிதுனம்

சனியால், துன்பங்கள் குறைந்து எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கைகூடிய காலமாக இருக்கும். உங்களுக்கு வர வேண்டிய, தடைப்பட்ட பணம் வந்து சேரும்.
​ரிஷபம்

சனி உங்களுக்கு யோகாதிபதியாக இருப்பதால் உங்களுக்கு யோகம் தரக்கூடிய அனைத்து அமைப்புகளும் ஏற்படும். தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

கன்னி

சனி போன்ற அசுப கிரகங்கள் சஞ்சரிக்கும் போது கெடுபலன்கள் குறையும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் குறையும். தொழில், வேலை தொடர்பான தடை, எதிரிகள் தரக்கூடிய பிரச்சினைகள் குறையக்கூடிய காலமாக இருக்கும். எதிரிகளின் தொல்லைகள் தீரும். பல காலமாக மனதை கவலையில் ஆழ்த்திக் கொண்டிருக்கின்றன வழக்கு விஷயங்கள் தீரும்.
​துலாம்

துலாம் ராசிக்கு இதுவரை இருந்த அர்த்தாஷ்டம சனி முடிந்து பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சரிப்பதால், பஞ்சம சனி தொடங்க உள்ளது.

உங்கள் ராசிக்கு சுகத்தை அதிகரிக்கக்கூடிய வகையில் வீடு, மனை, சொத்து வாங்குதல், வண்டி, வாகனம் போன்ற விஷயங்களை வாங்க முயன்று கொண்டிருந்தால் அவை கைகூடக்கூடிய வாய்ப்புள்ளது. வாழ்வில் ஏதேனும் ஒரு வகையில் உங்களுக்குச் சுகங்களைத் தரக்கூடிய காலமாக இருக்கும்.
தனுசு

இதுவரை நடந்து வந்த ஏழரை சனியின் கடைசி காலமான பாத சனி பலனுக்கு சிறிது காலம் ஓய்வு கொடுப்பதாக இருக்கும். சனியின் அதிசாரத்தால் பாத சனி விலகி சகாய சனிக்கான பலன்கள் கிடைக்க உள்ளது.

இந்த காலத்தில் எந்த ஒரு செயலிலும் தைரியமாக முடிவெடுப்பீர்கள். எந்த ஒரு முயற்சிக்கு நற்பலன் கிடைக்கும். பொருளாதர ரீதியாக நல்ல முன்னேற்றமும், எப்போதும் கையில் அதிக பணப்புழக்கம் இருக்கக்கூடிய காலமாக இருக்கும். திடீர் கோடீஸ்வர யோகம் உங்களுக்கு கிடைக்கும் தவர விடாதீர்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க   குரு உதயத்தால் அடித்த ஜாக்பாட்! பேரதிர்ஷ்டத்தில் 6 ராசிகள்

Shares