சித்திரைத் திருவிழாவில் பொறி பறக்க டிரம்ஸ் வாசித்து கலக்கிய இளஞ்சர்கள்… மாஸ் பண்ணிட்டாங்க போங்க..!
இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை எனச் சொல்லிவிடலாம். ஏன் நம்மை பார்த்தாலே படம் எடுத்து கொத்த வரும் பாம்பு கூட மகுடி இசையைக் கேட்டால் மெய்மறந்து நின்றுவிடும். அந்த அளவுக்கு இசைக்கு ரசிகர்கள் மிக அதிகம்

இசையை பல வகைகளில் வகைப்படுத்தலாம். நம் ஊரிலும் பாரம்பர்ய இசையான நாதஸ்வரம் தொடங்கி சிங்காரி மேளம் வரை பல இசைக்கருவிகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் தாண்டி, டிரம்ஸ் இசைக்கு தனித்த ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
டிரம்ஸ் இசையின் வசீகரத்தால் அதை விரும்பிக் கேட்கும் பலர் இருக்கிறார்கள். அந்தவகையில் இங்கேயும் சிலர் டிரம்ஸ் வாசிக்கும் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறதுஇந்த டிரம்ஸ் இசை சித்திரைத் திருவிழாவில் வாசிக்கப்பட்டது ஆகும். மதுரையில் நடக்கும் சித்திரைத் திருவிழா ரொம்பவே பிரபலம் ஆனது.

அது மிகவும் கோலாகலமாக நடக்கும். அந்த விழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துகொள்வார்கள். அந்த திருவிழாவில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கலைக்குழுவின்ர் டிரம்ஸ் வாசித்து அசத்தினர். அந்தக் காட்சிகள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.