இலங்கையில் சோகத்திலும் நெ கி ழ் ச்சியை ஏற்படுத்திய மா ண வனின் செயல் கண்ணீரில் உறவினர்கள்..!!

இலங்கையில் பாடசாலை மாணவன் ஒருவரின் செயற்பாடு நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தனது தாய் உயிரிழந்த போதும், பாடசாலை அணிக்காக விளையாடி வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

கொழும்பு இசிபத்தன கல்லூரியை சேர்ந்த ஹேஷான் ரந்திமால் என்ற மாணவனே வேதனையுடன் கல்லூரிக்காக வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

19 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது.

கொழும்பு இசிபத்தன கல்லூரி அணிக்கும் கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரி அணிக்கும் இடையிலான போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஹேஷான் ரந்திமால் பங்கேற்ற இசிபத்தன கல்லுரி வெற்றி பெற்றுள்ளது. போட்டி முடிவடைந்ததும் அணியின் சக மாணவர்களை ஹேஷானுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அனைவரும் இணைந்து அவரைஅழைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் மைதானத்திலிருந்து இருந்த ஏனைய மாணவர்களுக்கு வேதனை அளித்திருந்தது. எனினும் தாய் உயிரிழந்திருந்த போதும் கல்லூரியின் வெற்றிகாக விளையாடிய மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, இனிபத்தன மற்றும் புனித சூசையப்பர் அணியின் வீரர்கள் ஹேஷானின் வீட்டுக்கு சென்று அவரின் தாயாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஹேஷானின் தாயார் நேற்று முன்தினம் காலமானதுடன், அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்!
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares