அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
‘’மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும். முத்தம் காமத்தில் சேராது என” என கவிஞர் முத்துக்குமார் எழுதிய வரிகளின் வீச்சு ஒவ்வொரு அப்பாவுக்கும் தெரியும்.
அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். இங்கே அதையெல்லாம் அசால்டாக ஓவர்டேக் செய்வதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம்! ஒரு குட்டிக்குழந்தை தன் அப்பாவி மீது அதீத பாசம் வைத்துள்ளது. அந்தக் குழந்தைக்கு முழுதாக இரண்டு வயதுகூட ஆகவில்லை.
அந்தக் குழந்தையின் தந்தை சாப்பிட அமர்ந்திருந்தார். அவர் தன் மனைவி பரிமாறுவதற்காக காத்திருந்தார். அவரைப் பார்த்ததும், அந்தக் குழந்தை ஓடிவந்து தானே தன் அப்பாவுக்கு இட்லியை எடுத்து வைத்து பரிமாறியது. தொடர்ந்து அந்தக் குழந்தையே சாம்பாரையும் விட்டுக் கொடுக்கிறது. இந்தக் காட்சி நம்மையும் அறியாமல் பெண்குழந்தைகளின் மேன்மையைச் சொல்லி நம் கண்களையே குளமாக்குகிறது.