தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரேகா. இவர் தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
தற்போது இவர் அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் உருவாகும் மிரியம்மா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
மேலும் இந்நிலையில் மிரியம்மா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரேகா கர்ப்பிணியாக இடம் பெற்றுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது..
இதோ போஸ்டர்