தமிழ் சினிமாவில் 80 களின் கால கட்டங்களில் முதன் முதலில் துணை நடிகராக அறிமுகமாகி அதன் பின் ஹீரோவாக நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான நடிகர் சரத்குமார். இவர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யவம்சம், நட்புக்காக, சிம்மராசி, பாட்டாளி, சமுத்திரம், அரசு போன்ற பல திரைப்படங்கள் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
இந்நிலையில் நடிகர் சரத்குமாருடன் பல நடிகைகள் இணைந்து நடித்திருந்தாலும் எனக்கு நடிகை நமீதாவை தான் மிகவும் பிடிக்கும் என்று சரத்குமார் கூறியுள்ளார். ஒரு முறை நடிகை ராதிகாவை தவிர உங்களுக்கு எந்த நடிகை மிகவும் பிடிக்கும் என்று கேள்வி எழுப்ப நடிகர் சரத்குமார் கொஞ்சம் கூட யோசிக்காமல் நடிகை நமிதா என்று கூறியுள்ளார். காரணம் நடிகை நமீதா மிகவும் நன்றாக பழக கூடியவர்.
அதோடு நடிகை நமீதாவின் திருமணத்திற்கு என்னை நேரில் வந்து அழைத்தார். திருமணத்திற்கு திருப்பதி சென்றிருந்தேன். திருமண மேடையில் நின்று கொண்டிருந்த அவர் நான் வருவதை கவனித்ததும் உடனே கீழே இறங்கி வந்து என்னுடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். அவர் அப்படி செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.
ஆனால் அந்த இடத்தில் அவர் அப்படி செய்தது என்னுடைய மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இந்த விஷயத்தை என்னால் மறக்க முடியாது. அதிலிருந்து தான் நமீதா என்னை எந்த அளவிற்கு மதிக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என்று கூறியுள்ளார். சரத்குமார், நமீதாவும் இணைந்து ஏய், சாணக்யா, 1977 போன்ற படங்களில் நடித்துள்ளனர்..