சாதாரணமாக சின்ன சின்ன விடயங்கள் கூட இன்று அநேகருக்கு தெரியாத விடயங்கள் ஆகி விட்டன. இதை வைத்து இப்படியெல்லாம் செய்ய முடியுமா, இது நமக்கு தெரியாமல் போய் விட்டதே என்று சிந்திக்கும் அதே நேரம் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று வி ய க்கும் அளவிற்கு உலகம் வளர்ந்து வருகிறது.
அறிவாளிகளும் படைப்பாளிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன உலகில் நாமெல்லாரும் வாழ்ந்து வருகின்றோம், ஒவ்வொரு நாளும் உலகில் மூலையில் எங்காவது ஒரு புதிய கண்டு பிடிப்பு உருவாக்கிய வண்ணம் தான் உள்ளன
ஆனால் இன்றைய சூழலில் அதை அறிந்துகொள்வது சற்று சிரமாக உள்ளது, ஏனெனில் எண்ணற்ற கண்டு பிடிப்புக்கள் நாள்தோறும் வந்த வண்ணம் தான் உள்ளன. கடவுளின் படைப்புகளில் மனிதன் சற்று வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் காணப்படுகிறான்.
சிந்தித்து செயலாற்றும் ஒரு அறிவை மனிதன் கொண்டிருப்பதனால் நாள்தோறும் புதிய பல விடயங்களில் தானி ஈடு படுத்தி நாள் தோறும் வளர்ச்சியில் முன்னேறி வருகின்றான். அந்தளவிற்கு விஞ்ஞான வளர்ச்சியும் வளர்ந்து வருகிறது
இன்றைய உலகில் காணப்படும் யாவுமே மாற்றத்தினை நோக்கி தான் பயணித்து கொண்டு இருக்கிறது, மாற்றம் மட்டும் தான் மாறாதாது என்று கூறுமளவிற்கு இன்றைய நவீன உலகத்தின் வளர்ச்சி முன்னேறி வருகிறது, இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் புதிய பல விடயங்களை இணைய தளங்களில் காணவும் அவதானிக்கவும் முடிகிறது.