சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து குருவாக குரு பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார்.
இந்த குரு பெயர்ச்சியினால் கஷ்டங்கள் காணாமல் போகப்போகிறது.
சுப கிரகம் பொதுவாகவே மறையக்கூடாது. இங்கே குரு மறைந்தாலும் ஆட்சி அவரது வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார்.
எச்சரிக்கை தேவை
செய்யப்போகும் நல்ல காரியத்தை நிதானமாக செய்யவும்.
சின்னச் சின்ன தடைகள் வந்தாலும் உங்களின் சுய ஜாதகத்தின் படி குரு நல்ல நிலையில் இருந்தால் பாதிப்புகள் நீங்கும்.
குடும்ப பிரச்சினைகள் நீங்கும்
குருவின் பார்வையால் உங்க ராசிக்கு யோகங்கள் கிடைக்கப் போகிறது. அஷ்டமத்து குரு இரண்டாம் வீட்டினைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
மன உளைச்சல்கள் முடிவுக்கு வரும். வாக்கு ஸ்தானத்தில் குருவின் பார்வை விழுவதால் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும்.
பண வருமானம் அதிகமாகும். வேலை தொழிலில் புதிய புரமோசன் கிடைக்கும்.
பணம் சேரும்
சிலர் புது வீடு கட்டும் யோகம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வண்டி வாகனங்களில் இருந்த பிரச்சினைகள் விலகும்.
கடனாகக் கொடுத்த பணம் கைக்கு வரும். அரசால் ஆதாயம் உண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.
வருமானம் அதிகரிக்கும்
வருமானம் அதிகமாக வந்தாலும் சில விரைய செலவுகளும் வரலாம் எனவே வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்யுங்கள்.
ஏழாம் வீட்டில் சனி குரு, கேது என சஞ்சரிக்க காலத்தில் திருமண வாழ்க்கையில் மிகப்பெரிய தடை ஏற்பட்டது.
திருமண வாழ்க்கையில் கருத்துவேறுபாடு, காதல் முறிவு, மண முறிவு என சிக்கல்களை சந்தித்தது. அப்பா உடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.
கவனமும் நிதானமும் தேவை
குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
வீண் பழி, அவப்பெயரை ஏற்படுத்தும் கவனமும் பொறுமையும் தேவை. அறிமுகமில்லாதவர்களை நம்பவேண்டாம்.
புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. உங்களைப்பற்றிய ரகசியங்களை காக்கவும். ஆணோ, பெண்ணோ எச்சரிக்கையாக இருக்கவும். உடலில் அசதி, சோர்வு, சுபச் செலவுகள் வந்துபோகும். மறதியால் விலையுயர்ந்த பொருள்களை இழக்க நேரிடும் கவனம் தேவை.
கண்டச் சனி
கண்டச் சனியும் அஷ்டம குருவும் இருப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கவனம் தேவை. பணம் விவகாரங்கள், கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போட்டு கடன் வாங்கித் தர வேண்டாம். புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு தேவையில்லை. பொறுமை தேவை.
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் மேதா தட்சிணாமூர்த்தியை வணங்கி யாகங்களில் பங்கேற்கலாம். பாதிப்புகள் சற்றே குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்த நன்மைகள் அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).