ஒரே நா ளில் அக்கா அண்ணன் மரணம்.. பிரபல.. நடிகரின் வீட்டில் சோகம்..!!

ஒரே நாளில் அக்கா மற்றும் அண்ணன் இருவரும் அடுத்தடுத்து மாரடைப்பால் காலமானதால் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர் நடிகர் போஸ் வெங்கட்டின் குடும்பத்தினர்.

சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக உள்ளார் போஸ் வெங்கட், மெட்டி ஒலி நாடகத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர்.

சின்னத்திரையில் அசத்தி வந்த போஸ் வெங்கட், சினிமாவில் வில்லனாக முத்திரையை பதித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவரது அக்கா வளர்மதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார், இதற்காக இவரது அண்ணன் ரங்கநாதன் சென்னை வந்திருக்கிறார்.

அங்கே எம்.எம்.கே பகுதியில் உள்ள இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடந்தது, சகோதரியின் மரணத்தை தாங்கமுடியாமல் ரங்கநாதன் கதறி அழுதுள்ளார், அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்படவே சகோதரியின் உடல் மீது சாய்ந்து மரணமடைந்தார்.

இதனால் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் பேரதிர்ச்சியில் உறைந்துவிட்டனர், வளர்மதியின் இறுதிச்சடங்குகள் நேற்று நடைபெற்ற நிலையில், ரங்கநாதனின் உடல் சொந்த ஊரான அறந்தாங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் அக்கா, அண்ணன் என இருவருரையும் இழந்து வாடும் போஸ் வெங்கட்டின் குடும்பத்தினருக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   நடிகை ஐஸ்வர்யா மேனனின் மயக்கும் கடற்கரை போட்டோஷூட்..
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares