காடு மாதிரி கொத்தமல்லி வளர்க்க என் மாமியார் சொல்லித்தந்த சில tips..!

கொத்தமல்லி இல்லாமல் சமையல் இல்லை என்ற நிலையில் விவசாயிகளுக்கு நல்ல லாபத்தை ஈட்டித் தருவதற்கும், சிறந்த மருத்துவ குணமுள்ள பயிராகவும் உள்ள கொத்தமல்லியை சாகுபடி செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.

மக்களின் அன்றாட சமையல் தேவையில் முக்கிய பங்கு வகிப்பது கொத்தமல்லி. சில மாதங்களாக மார்க்கெட்டில் கொத்தமல்லிக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. 400 கிராம் எடை கொண்ட ஒரு கொத்தமல்லி கட்டு ரூ. 15 முதல் ரூ.60 வரை நாளுக்கு ஒரு விலை விற்கிறது. விவசாயிகள் முறையாக கொத்தமல்லி சாகுபடி செய்தால் அதிக லாபம் கொழிக்கலாம்.

கொத்தமல்லி எல்லா பருவத்துக்கும் ஏற்ற சாகுபடி தன்மை கொண்டது. தாமதமாக பூத்து அதிக மகசூலை தரக்கூடியது. செடியின் அடி பாகத்தில் இருந்து அதிக அளவு தூர் வெடிக்கும் தன்மை கொண்டது. அதிக கிளைகளை கொண்டிருப்பதால் பூப்பதற்கு முன்னதாகவே அறுவடைக்கும் ஏற்றதாக உள்ளது. செடிகள் பூத்த பின்னும் பக்கக் கிளைகளில் உள்ள இலைகள் சமையலுக்கு பயன்படுகிறது.

ஒரே முறையாக ஏக்கர் கணக்கில் பயிரிடாமல் 20 முதல் 25 சென்ட் வரை பிரித்து 15 தினங்களுக்கு ஒரு முறை விதைத்தால் ஆண்டுதோறும் அறுவடை செய்து லாபம் ஈட்ட முடியும். விதைத்த 30 முதல் 40 நாளில் அறுவடைக்கு தயாராவதால் குறுகிய கால பணப் பயிராகவும் கொத்தமல்லி கருதப்படுகிறது.

சரி வாருங்கள் காடு மாதிரி கொத்தமல்லி வளர்க்க என் மாமியார் சொல்லித்தந்த சில tips

இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள். மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *