தெற்கு கிரீஸின் கடற்கரையில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற கடற்றொழிலாளர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 78 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்தின்போது ஏராளமானவர்கள் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் கிரேக்கத்தின் தெற்கு பெலோபொனீஸ் பகுதிக்கு தென்மேற்கே 75 கிலோமீட்டர் (46 மைல்) தொலைவில் இடம்பெற்றுள்ளதாகவும் அப்பகுதியில் தற்போது தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பான முழுமையான செய்திகளையும் பல உலக செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது உலக செய்திகளின் தொகுப்பு