23 வயதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனுக்கும் சுவிஸ்லாந்தில் விவாகரத்துப் பெற்று வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 37 வயதான பெண்ணுக்கும் கடந்த வாரம் கொழும்பில் பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளது
குறித்த பதிவுத் திருமணம் இரு தரப்பைச் சேர்ந்தவர்களின் நெருங்கிய உறவுக்காரர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்தப் பதிவுத் திருமணத்தின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் கொழும்பில் உள்ள வீடியோக் கலையகத்தைச் சேர்ந்தவர்களால் எடுக்கப்பட்டதாகவும் அதில் சில காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த மாணவன் சுவிஸ்லாந்திற்கு வதிவிட விசா எடுப்பதற்காக இவ்வாறான செயற்பாட்டைச் செய்தாரா என்பது தெரியவரவில்லை.
சுவிஸ்லாந்திற்கு திருமணமானவர்கள் விசா அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது உறவுகள் மற்றும் முக்கியஸ்தர்கள் தமது திருமணத்திற்கு வந்ததற்கான சாட்சிகளாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை துாதரகத்தில் சமர்ப்பித்து அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது வழக்கமாகும்.