நடிகர் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, தனது நடிப்புத்திறமையினால் பல மொழிகள் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவிலும் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் இவர் தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் அவரது மகன் நடித்துள்ள நிலையில், விடுதலை படத்திலும் மலைவாழ் மக்களில் ஒருவராக நடித்துவருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இப்படத்தின் இரண்டாவது பாகத்தில் இவரது நடிப்பு அதிகமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், ஹீரோவாக மாற தீவிர முயற்சியினை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் சூர்யா சேதுபதி, தன்னுடைய அப்பா விஜய் சேதுபதியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இதனை அவதானித்த ரசிகர்கள் ஹீரோவாக நடிக்கும் அப்பாவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் அரும்பு மீசையோடு சூர்யா செம்ம ஃபிட்டாக இருப்பதாக கூறிவருகின்றனர்.