ஜேர்மனியின் சு ய வேலைவாய்ப்பு விசா ப ய னுள்ள சில த கவல்கள்..!!!

ஜேர்மனியின் சுய வேலைவாய்ப்பு விசா திட்டம், வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அது என்ன விசா?

அதன் பெயர் சுய வேலைவாய்ப்பு விசா திட்டம். தங்க விசா திட்டத்துக்கு இணையான இந்த சுய வேலைவாய்ப்பு விசா திட்டம், எப்படி தங்க விசா திட்டம் எளிதாக குடியுரிமைக்கு வழிவகை செய்யுமோ, அதேபோல குடியுரிமை பெறுவதை எளிதாக்குகிறது..

தங்க விசா திட்டத்தைப் போலவே, சுய வேலைவாய்ப்பு விசா திட்டத்திலும் வெளிநாட்டவர்கள் ஒரு குறிப்பிட தொகையை முதலீடு செய்வதன்மூலம் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற முடியும்.

ஜேர்மனியின் சுய வேலைவாய்ப்பு விசா: பயனுள்ள சில தகவல்கள் | Germany Self Employed Visa

அதாவது, சுய வேலைவாய்ப்பு விசா திட்டத்தின் வாயிலாக, உள்ளூரில் தொழில் ஒன்றைத் துவக்குவதன் மூலமாக உள்ளூர் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்பவர்களுக்கு, ஜேர்மனியில் குடியிருப்பு அனுமதி எளிதாகப் பெறலாம், அவர்கள் விரும்பினால், அதன் மூலம் ஜேர்மன் குடியுரிமையும் பெறலாம்.
செல்வந்தர்களைக் கவர்ந்துள்ள திட்டம்

தங்க விசா திட்டத்தைப் போலவே, செல்வந்தர்களைக் கவர்ந்துள்ள இந்த சுய வேலைவாய்ப்பு விசா திட்டத்திற்கான விண்ணப்ப நடைமுறை, அவர்கள் எந்த இடத்துக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்பதுபோன்ற சில விடயங்களைப் பொருத்து, ஆறு மாதங்களில் முடிந்துவிடும்.

முதலீடுகளைப் பொருத்தவரை, ரியல் எஸ்டேட், அரசு முதலீட்டுப் பத்திரங்கள், நன்கொடைகள் அல்லது சொந்தத் தொழில் துவக்குதல் என எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

ஜேர்மனியின் சுய வேலைவாய்ப்பு விசா: பயனுள்ள சில தகவல்கள் | Germany Self Employed Visa

இந்த சுய வேலைவாய்ப்பு விசா திட்டத்தின் நன்மைகளில் ஒன்று, இது நிரந்தர விசா என்பதாகும். அத்துடன், இந்த விசா பெறுபவர்கள் தங்கள் கணவன், அல்லது மனைவி பிள்ளைகளையும் தங்களுடன் ஜேர்மனிக்கு அழைத்துவரலாம். எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்தபின் ஜேர்மன் குடியுரிமைக்கும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது (இந்த விதியில் மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது).

Shares