jaffna7news

no 1 tamil news site

News

சுவிஸ் கு டி யுரிமை தொடர்பில் தொ டர்ந்து வெளிநாட்டவர்களுக்கு ஏமாற்றம் பிரேரணை தோல்வி..!1

சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் சுவிஸ் பாஸ்போர்ட் பெறுவதை எளிதாக்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணையை சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையான சுவிட்சர்லாந்தின் தேசிய கவுன்சில் நிராகரித்துவிட்டது.
சமீபத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான குடியிருப்பு கால தகுதிகளை குறைக்கும் புதிய முயற்சியாக சமீபத்தில் பிரேரணை ஒன்று கிரீன்ஸ் லிபரல் கட்சியால் முன்வைக்கப்பட்டது.

ஆனால், சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு தடையாக இருக்கும் விடயங்களை குறைக்கவேண்டும் என்னும் கிரீன்ஸ் லிபரல் கட்சியின் கோரிக்கையை தேசிய கவுன்சில் சுவிஸ் நிராகரித்துவிட்டது.

குடியுரிமை அளிப்பதில் நியாயமான விதிகள் தேவை என்று கோரி முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை, சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வசிக்க வேண்டும் என்ற தற்போதைய முறையைப் பராமரிக்க விரும்புவதாகக் கூறி ஏற்கனவே நான்கு முறை நிராகரித்துவிட்டனர் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர்.

இம்முறையும் எளிதாக சுவிஸ் குடியுரிமை பெறுவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளதால், வெளிநாட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

சுவிஸ் குடியுரிமை தொடர்பில் தொடர்ந்து வெளிநாட்டவர்களுக்கு ஏமாற்றம்: பிரேரணை தோல்வி | Foreigners Disappointed With Swiss Citizenship

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares