யாஷிகா ஆனந்துக்கு திருமணம்! லவ்-லாம் செட் ஆகாது.. வீட்டில் பார்த்த பையனை மணக்கிறார்

நடிகை யாஷிகா ஆனந்த் அதிகம் கவர்ச்சி காட்டி தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களை ஈர்த்தவர். அவர் கடந்த வருடம் விபத்தில் சிக்கி தற்போது தான் குணமடைந்து திரும்பி இருக்கிறார்.

திருமணம் தற்போது யாஷிகா அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் தனக்கு திருமணம் என சொல்லி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

அதில் அவர் “திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல் வழங்கி விட்டார்கள், இது arranged திருமணம் தான், லவ்லாம் செட் ஆகாது” என கூறி இருக்கிறார்.

அது மட்டுமின்றி யாஷிகா திருமணத்திற்கு பிறகும் ரசிகர்களை entertain செய்வேன் என கூறி உள்ளார்.

உண்மையா இல்லை முட்டாள்கள் தின prankஆ?

யாஷிகா இப்படி ஒரு பதிவை திடீரென இன்ஸ்டாகிராமில் போட்டிருப்பது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இருப்பினும் இன்று ஏப்ரல் 1 என்பதால் இப்படி prank பதிவை போட்டிருக்கிறாரா என தெரியவில்லை.

Shares