ஒரு நொடியில் உயிர் தப்பிய மாணவிகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நொடியில் உயிர் தப்பிய மா ண விகள்
கேரள மாநிலம், கோழிக்கோடு, மாவூரில் பேருந்துக்குப் பின்னால் இரு மாணவிகள் பைக்கில் வந்துக்கொண்டிருந்தனர். அப்போது, பேருந்தை முந்திச்செல்வதற்காக குறுகலான வழியில் மாணவிகள் பைக்கில் வந்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென்று எதிரே மினி லாரி வர, பேருந்துக்கும் லாரிக்கும் இடையே 2 மாணவர்கள் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் இரு மாணவிகள் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பினர்.
தற்போது, இது தொடர்பான CCTV காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் வாகனங்கள் ஓட்டும்போது கவனம் தேவை. இப்படி பேருந்தை முந்திச் சென்றால் இப்படி தான் நேரும். உயிரை மதித்து மெதுவாக பயணம் செய்யுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Content Warning.#CCTV Visuals show two students having a miraculous escape in #Kozhikode's Mavoor while being stuck between a bus and a lorry.#Kerala pic.twitter.com/1cAFWN42Fh
— Shibimol K G (@KGShibimol) June 8, 2023