தயவுசெய்து ஆண்கள் இந்த வீடீயோவை கட்டாயம் பாருங்க
இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் எனக்கு சிசேரியன்தான் ஆச்சு என்று கூறுவதைக் கேட்க முடிகிறது. அந்தக் காலத்தைப் போல பிரசவ வலி எடுத்து, பிரசவிக்கும் வேதனையை அனுபவித்து, மறு பிறவி எடுத்து, கடும் போராட்டத்துக்குப் பின்னர் பெற்றெடுத்த குழந்தையின் முகம் பார்த்து பட்ட வேதனையையெல்லாம் அப்படியே மறந்து பூரிப்புடன் மகி்ழ்ச்சிப் பெருக்கில் அயர்ந்து போகும் பாக்கியம் நிறையப் பெண்களுக்குக் கிடைகப்பதில்லை.

அதற்குக் காரணம், பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியன் எனப்படும் அறுவைச் சிகிச்சை மூலம் நடைபெறுவதுதான். அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் சுகப் பிரசவமே நடைபெறுகிறது. பிரச்சினை என்று வந்தால் மட்டுமே அங்கு சிசேரியனுக்குப் போகிறார்கள்.
ஆனால் 99 சதவீத தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும் இயற்கையான அதாவது சுகப் பிரசவமே நல்லது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். இப்போதும் கூட சுகப் பிரசவம் சாத்தியமானதுதான்.

அதற்கு சில வழிமுறைகளை கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதைச் செய்தாலே போதும், சுகப் பிரசவமாக முடியும் என்கிறார்கள் அவர்கள். சரி வாருங்கள் சுகப்பிரசவம் எப்படி நடக்கும் என்று பார்க்கலாம்