jaffna7news

no 1 tamil news site

News

37 ஆயிரம் அடி உயரத்தில் கம்பீரமாகப் பறக்கும் தமிழ் வீ டி யோ பாருங்க… சிலிர்த்து போய்விடுவீர்கள்.

தமிழ் மிகவும் அருமையான மொழி. இவ்வளவு ஏன்? மகாகவி பாரதியாருக்கு ஆங்கிலம், ஆரியம், வங்கம், இந்தி, பிரெஞ்சு என பல மொழிகள் தெரியும். இத்தனை மொழிகள் தெரிந்தும் பாரதியார் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என உச்சி முகர்ந்து பாராட்டினார்.

தமிழ் மக்களில் சிலருக்குத் தான் தமிழ் மொழியின் பெருமை தெரிவதில்லை. தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் மம்மி, டாடி எனச் சொல்வதைப் பெருமையாக நினைக்கிறோம். ஆனால் வெளிநாட்டினரே தமிழ் மொழியின் அருமை, பெருமை தெரிந்து அதைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு இங்கே வருவதையும் நம்மால் காணமுடிகிறது.

அந்தவகையில் இப்போது 37 ஆயிரம் அடி உயரத்தில் தமிழின் பெருமையைச் சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நம் தமிழகத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்னும் விமானி வெளிநாட்டில் பைலட்டாக விமானத்தை ஓட்டுகிறார். அவர் தன் பயணிகளுக்கு தூய்மையான தமிழ் மொழியில் நாம் இப்போது தரையில் இருந்து 37 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறோம்.

இப்போது வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இன்னும் அரை மணிநேரத்தில் இந்த பயணம் இலக்கை எட்டிவிடும்.’’எனப் பேசுகிறார். குறித்த இந்த காணொளி நம் தமிழ் மொழியின் பெருமையையும் உலகறிய பறைசாற்றுகிறது. இந்தக் காட்சிகள் இணையத்தில் இப்போது வைரல் ஆகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares