அட கடவுளே ஆளே மாறி தள்ளாடும் வயதில் இருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா இதோ நீங்களே பாருங்க
அட கடவுளே .. ஆளே மாறி தள்ளாடும் வயதில் இருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா ?? இதோ நீங்களே பாருங்க ..!!!
இவர் ஒரு பி.எல். பட்டதாரி மற்றும் தொழில்முறை வழக்கறிஞர். அவற்றோடு ஜோதிடம் பார்ப்பவரும் கூட. இவர், பல திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார். இவ்வளவு ஏன், கமல் ஹாசன் ஹீரோவாக நடித்த மாலை சூட வா படத்திற்கு திரைக்கதை எழுதியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 1965ம் ஆண்டு வந்த இப்படத்தில் இவருடன் இணைந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா ஆகியோர் பலரும் அறிமுகமாகியுள்ளனர். இப்படத்தின் மூலம், மூர்த்தி மற்றும் நிர்மலா ஆகியோருக்கு வெண்ணிற ஆடை என்ற அடைமொழி கிடைத்தது.
தனது நடிப்புத் திறமையின் மூலம், தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத காமெடியனாக மாறிய வெண்ணிற ஆடை மூர்த்தி 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தன்னுடன் நடித்த மணிமாலாவை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவர், தனது 80வது பிறந்தநாளை மிக எளிமையாக தனது மனைவி மணிமாலாவுடன் கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளுக்கு, பழம்பெரும் நகைச்சுவை நடிகை சச்சு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.