சீரியலில் ஜோடியாக நடித்த பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிகழ்வுகள் சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகின்றன. சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா, ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ் – ஆலியா மானசா, திருமணம் சீரியல் பிரபலங்களான சித்து – ஷ்ரேயா, பூவே பூச்சூடவா தொடரில் நடித்த மதன் – ரேஷ்மா என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். அந்த பட்டியலில் அண்மையில் இணைந்த ஜோடி தான் விஷ்ணுகாந்த் – சம்யுக்தா.
இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து தொடரில் நடித்தபோது காதலித்தனர். பின்னர் கடந்த மார்ச் மாதம் இந்த ஜோடிக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமான இரண்டே மாதத்தில் தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இருவருமே நீக்கினர். இதனால் இவர் இருவரும் பிரிந்துவிட்டார்களா என்கிற ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தாங்கள் பிரிந்துவிட்டதை தனித்தனியாக அறிவித்ததோடு, இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். சம்யுக்தாவின் தந்தை அடிக்கடி வீட்டுக்கு வருவதால் தான் தங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக விஷ்ணுகாந்த் கூறினார்.