தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்கதிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. இதனால் அப்பகுதியில் கதிர் அடிக்கும் இயந்திரம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேத்திரெட்டிப்பட்டி அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின், 13 வயது மகள் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமி, தனது மாமா சக்திவேல் தோட்டத்தில் ராகி கதிர் அடிக்கும் மெஷின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கதிர் அடிக்கும் இயந்திரத்தின் ஒரு பாகம் பள்ளி மாணவியின் தலையில் தாக்கியது.
அதில் படுகாயம் அடைந்த சிறுமிக்கு அதிக ரத்தம் வெளியேறி அவர் சம்பவத்திலேயே மயங்கி விழுந்தார். சிறிறு நேரத்துக்கு பின் உறவினர்கள் சென்று பார்த்த போது சிறுமி உயிரிழந்து சடலமாக கிடந்தார். இதனால் உறவினர்கள் கதறி அழுதனர். அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.