எளிதாக கிடைக்கும் வாழைப்பழத்தில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் B6, வைட்டமின் C உள்ளன. மேலும் மேன்கனீஸ், மெக்னீசியம், காப்பர், பயோட்டின் போன்ற தனிமங்கள் உள்ளன.

மூளைக்கு ஊட்டச்சத்து கொடுக்கக் கூடிய பழம் வாழைப்பழம். ஏனென்றால் வாழைப்பழத்தில் ட்ரிப்டோபென் அமினோ அமிலம் உள்ளது. இது மூளையில் சேரோடோனின்,டோயின் இரண்டு வகையான ஹார்மோன்களை சரியான அளவில் சுரக்க வைக்கிறது.

வாழைப்பழத்தில் மேன்கனிஸ், மெக்னீசியம் உள்ளதால் எலும்புக்கு நல்லது. குடலுக்கும், வயிற்றுப்பகுதியில் உள்ள உறுப்புகளுக்கும் நல்லது. இதில் நார்ச்சத்து அதிகம். இது தேவையில்லாத பொருட்களை வெளியேற்றி செரிமான மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.

தினமும் காலை மற்றும் மதியம் உணவுகளை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.

அல்சர் என்பது வயிறு மற்றும் குடல்களில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடிய ஒரு புண் ஆகும். இந்த அல்சர் பெரும்பாலும் காலை உணவுகளை தவிற்பவர்களுக்கும், அதிக கார உணவுகளை அடிக்கடி உண்பவர்களுக்கும் ஏற்படும்.

தினமும் காலை உணவை சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, பின்பு காலை உணவை சாப்பிட்டு வந்தால், இந்த அல்சர் புண்கள் கூடிய விரைவில் குணமாகும். வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் செயல்பாடுகளையும் சீரமைக்கும்.

வாழைப்பழத்தை சாப்பிட்டு பின்பு ஒரு கோப்பை தண்ணீரில் சிறிது உப்பு மற்றும் சர்க்கரை கலந்து அந்த நீரை அருந்தினால், வயிற்றுப்போக்கால் உடல் இழந்த சத்துக்களை மீண்டும் பெற உதவுகிறது.

Shares