எளிதாக டிரைவிங் படிக்க வெளியாகியுள்ள புதிய டெக்னாலஜி குறித்த வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஆதரவை பெற்று வைரலாகி வருகிறது.
நாம் அனைவரும் சிறுவயதில் சைக்கிள் ஓட்ட பழகுவதற்கு எத்தனை முறை கீழே விழுந்தாலும் எழுந்து சலிக்காமல் ஓட்ட தானாகவே முயற்சி எடுத்து கற்றுக் கொண்டிருப்போம். பிறகு scooty, பைக் போன்றவற்றை இயக்குவதற்கு கற்றுக்கொள்வோம்.பைக் போன்ற இரு சக்கர வாகனங்களை ஓட்ட கற்றுக்கொள்வதற்கு என்று தனி வகுப்புகள் வைத்து நிறுவனங்களை நடத்தியும் வருகின்றனர். இதற்கு டிரைவிங் ஸ்கூல் என்ற பெயரும் உண்டு.
அதே போலவே நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த வகுப்புகள் அனைத்தும் திறந்த ஒரு பெரிய மைதானத்தில் முதலில் ஓட்டக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. பிறகு கொஞ்சம் வாகனத்தை அழகாக இயக்கிய பின் சாலைகளில் பழக வைப்பார்கள். அதுவும் உண்மையான வாகனங்களை வைத்தே ஓட்ட பழகுவதற்கு கற்றுக் கொடுக்கப்படும்.
ஆனால் இதனை வித்தியாசமான முறையில் பேரம்பேளூரில் உள்ள கௌரி டிரைவிங் ஸ்கூலில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இங்கு இவர்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மை போன்ற பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதில் அனைவரும் எளிதான முறையில் கார் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம்.
அதுவும் எப்போதும் ஆகும் செலவை விட குறைந்த செலவே ஆவதால், இங்கு அதிகமானோர் கார் ஓட்ட கற்றுக் கொள்ள வருகிறார்கள். இதன் மூலம் இங்கு பயிலும் அனைவரும் வெற்றிகரமாக தற்போது கார்களை ஓட்டுகிறார்கள்.