பொதுவாக உடல் உபாதைகளுக்கு உணவு பத்தியம் கைகொடுக்கும். ஆனால் உடல் வலியைப் பொறுத்தவரை தோசை சாப்பிட்டாலே போயிடும் என்றால் ஆச்சர்யம் தானே? அதைப்பற்றி தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்
கீரை வகைகளை உணவில் சேர்ப்பதே உடலுக்கு ஆரோக்கியமான விசயம். அதிலும் முடக்கத்தான் கீரைக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. இந்த கீரையை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து நன்றாக கழுவி மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது நம் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் இட்லி மாவோடு இதை கலக்க வேண்டும். அதாவது ஆறு கரண்டி இட்லி மாவுக்கு, இந்த ஒரு கைப்பிடி முடக்கத்தான் கீரையை அரைத்த கலவை போதுமானதாக இருக்கும். இதன் மூலம் ஆறு தோசை வரை சுட முடியும்.
இந்த கலவையானது கொஞ்சம் தண்ணீர் ஆக இருக்க வேண்டும். கட்டியாக இருந்தால் தோசை நன்றாக வராது. இந்த முடக்கத்தான் கீரை தோசை கை வலி, கால் வலி, மூட்டு வலி, உடல் வலி என சகல வலிகளில் இருந்தும் நம்மை ரிலாக்ஸ் ஆக்கி விடும்.
மூலிகைக் கீரை வகையான முடக்கத்தான் கீரையை வீட்டிலேயே வளர்த்து வாரம் ஒருமுறை இப்படி தோசை சுட்டு சாப்பிட்டு பாருங்கள்… நீங்களே வித்யாசத்தை உணர்வீர்கள்