தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகர் சரத்பாபு. இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கு சினிமாவில் ‘ராம ராஜ்ஜியம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
மேலும் இவர் அதன் பின் தமிழ் சினிமாவில் கடந்த 1977 ஆம் ஆண்டு வெளியான பட்டின பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் சரத்பாபு அறிமுகமானார். இவரை தமிழில் இயக்குநர் கே பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். இவர் நடித்த முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பு திறமையால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
அதன் பின் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் ஆரம்பித்தார். ஹீரோவாக இவர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும், அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதே போல் இரண்டாவது ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் முத்து, அண்ணாமலை, போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
இந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதுவரை இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 71 வயது. இவர் வயது முதிர்வு காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.