உன்னால தான் எ ன் பு ள் ள செ.த்.தான்… கள்ள.க்.கா.தல் வி.வ.காரத்தால் நடந்த விபரீதம்..!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலைச் சேர்ந்தவர் ராசாத்தி. இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
ராசாத்தி அன்னவாசலிலுள்ள தன் தாய் வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில், அன்னவாசலைச் சேர்ந்த முத்துக்குமார் (30) என்பவருக்கும், ராசாத்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரத்தை அறிந்த ராசாத்தியின் மூத்த மகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, தங்களின் மூத்த மகன் இறப்புக்கு முத்துக்குமார்தான் காரணம் என்று கருதிய முருகேசன், அவரின் உறவினர்கள் முத்துக்குமார் வீட்டுக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
வாக்குவாதம் முற்றியதை அடுத்து முருகேசன் மறைந்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்துக்குமாரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முத்துக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை குற்றவாளி முருகேசனை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.