பொன்னியின் செ ல் வன் படத்திற்கு த்ரிஷா வா ங் கிய சம்ப ளம் இவ்வளவு குறைவா? ஷா க் கான ரசி க ர் கள்..!!

நடிகை த்ரிஷா ஜோடி படத்தில் சிம்ரனுடன் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்குள் எண்ட்ரி ஆனார். பின்பு இவர் மௌனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்பு அடுத்தடுத்து, விக்ரம், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். சினிமாவில் திருப்புமுனையாக இருந்த திரைப்படம் என்றால் அது சிம்புவுடன் இவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா என்பதே. இதில் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு த்ரிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவு குறைவா? ஷாக்கான ரசிகர்கள் | Ponniyin Selvan 2 Trisha
பொன்னியின் செல்வன்

பின்பு விஜய்சேதுபதியுடன் 96 படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி ஜானுவாக ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின்பு தற்போது பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட படத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.

இப்படத்தில் குந்தகையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்த நிலையில், அவரால் நடிக்க முடியாமல் போனதால் இந்த வாய்ப்பு த்ரிஷாவிற்கு கிடைத்துள்ளது.

தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திய த்ரிஷா, இவரை விட யாராலும் குந்தவையாக நடிக்க முடியாது என்று நினைக்கும் அளவிற்கு தனது நடிப்பினை கொடுத்தார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு த்ரிஷா வாங்கிய சம்பளம் இவ்வளவு குறைவா? ஷாக்கான ரசிகர்கள் | Ponniyin Selvan 2 Trisha

இப்படத்தின் முதல்பாகம் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற நிலையில் இன்னும் சில தினங்களில் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் த்ரிஷா நடித்ததற்கு சம்பளம் 2.5 கோடி ரூபாய் முதல் பாகத்திற்கு வாங்கியுள்ளார்.

தற்போது இரண்டாவது பாகத்திற்கு 3 கோடி ரூபாய் வாங்கியுள்ளாராம். ஒரு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றாலே சம்பளத்தை உயர்த்து ஹீரோயினுக்கு மத்தியில் த்ரிஷா தற்போது பெற்றுள்ள சம்பளம் ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது

Shares