150 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் அரிய நிகழ்வு! யாரால் பார்க்க முடியும்

150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது.

வழக்கமாக கங்கன சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம் ஆகியவை அவ்வப்போது நிகழ்ந்து வரும் நிலையில் பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடைபெறும்.


இந்நிலையில் இந்த அரிய நிகழ்வானது அவுஸ்திரேலியாவில் இன்று (20.04.2023) நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த நிகழ்வை காண முடியாது. ஆஸ்திரேலியாவில் மட்டுமே இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

அதாவது 62 வினாடிகளுக்கு சூரியன் பூமியை மறைக்கப்படும் காட்சி தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த முழு சூரிய கிரகணம் எப்போது…!

இந்த கிரகணம் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு விளக்கமளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து முதன்மை விஞ்ஞானி எபினேசர் கூறுகையில், இன்று (20) நடக்கும் பூரண சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்துகொள்ளும் வகையில் வானியற்பியல் விஞ்ஞானிகள் மூலம் விளக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக காலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதற்கு அடுத்த முழு சூரிய கிரகணம் 2172ஆம் ஆண்டு தான் நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மறக்காமல் இதையும் படியுங்க   உங்க பெயர் இந்த எழுத்துக்களில் ஆரம்பிக்கிறதா? அப்போ ராஜ வாழ்க்கை அமையுமாம்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *