வகுப்பறை முகாமைத்துவமும் ஒழுக்காற்றுப் பிரச்சினைகளும்

முனைவர் மா.கருணாநிதி –
மாணவர்களின் ஒழுக்காறு தொடர்பான பிரச்சினைகள் இன்று ஆசிரியர்கள்> பெற்றோர்கள் அதிபர்களைப் போன்றாரை மட்டுமன்றி கல்விக் கொள்கை வகுப்போரையும் ஈர்த்துள்ளது. வகுப்பறைக் கல்வியின் ஒரு முக்கிய அம்சம் அதன் கால எல்லையாகும்.

முறையான கல்வி ஆசிரியர் தமது நோக்கத்தை அடைவதிலுள்ள பலதடைகளில் மாணவரின் ஒழுக்காற்றுப் பிரச்சினையும் முக்கியமானதாகும். புதிதாக நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாகும். வகுப்பறையில் அவ்வப்போது எழும் ஒழுக்காற்றுப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கான சில வழிமுறைகள் இங்கு தரப்படுகின்றன.

1. வகுப்பறைப் பாடத்தைத் தொடங்கும் ஆசிரியர் எப்போதும் உயர்ந்த எதிர்பார்ப்புகளுடனும் உடன்பாடான உளப்பாங்குடுடனும் செயலாற்ற முற்பட வேண்டும். ஆசிரியர் இதற்கு மாறாக மாணவர்பற்றிய எதிர்மறைச் சிந்தனைகளுடன் அவர்கள் நிச்சயமாக குழப்பம் விளைவிக்க ஆயத்தமாக உள்ளனர். அன்பு எதிர்பார்ப்புடன் தமது பணியைத் தொடங்குமிடத்து அவர் தவறான நடத்தைக் கோலங்களையே எதிர்கொள்ள நேரிடும். வகுப்பறை முகாமைத்துவத்தில் அதிகம் கருத்தில் கொள்ளப்படாத அம்சம் இதுவாகும்.

2. வகுப்பறையில் ஒழுக்காற்றுப் பிரச்சினை ஏற்பட ஆசிரியரும் காரணமாகிறார் என்ற கருத்து உண்டு. ஆசிரியர் தமது பாடத்தை முறையாகத் திட்டமிடாது வகுப்பறைக்குச் செல்லுமிடத்து அதனைத் துரிதமாகப் புரிந்து கொள்ளும் மாணவர்கள் குழுப்பங்களை உருவாக்க முயல்வது இயல்பாகும். எனவே ஆசிரியர் பாடங்களை ‘மிதமிஞ்சி’ – அதிகளவில் ஆயத்தம் செய்வதோடு கற்பித்தலுக்கான சாதனங்கள் முறைகள் என்பவற்றை முன்னதாகவே உறுதி செய்து கொண்டு வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். இதனால் மாணவர்கள் சோம்பியிருக்கும் நேரத்தையும் அதனால் ஏற்படக்கூடிய ஒழுக்காற்றுப் பிரச்சினைகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும்.

3. இன்றைய கல்வி ஏழ்பாட்டில் ஆசிரியர்கள் 40 நிமிடங்களுக்குத் தொடர்ந்து விரிவுரையாற்றி விட்டு இறுதியில் வினாக்களைக் கேட்டுப் பாடத்தை முடித்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. பாடத்துக்கிடையே வினாக்கேட்டல் குழுப்பணியைப் பல செயற்பாடுகளை ஆயத்தம் செய்திருக்கும் ஆசிரியர் ஒன்றிலிருந்து அடுத்த கட்டத்திற்கு முறையாக> மாணவர் ஒழுக்காற்றல் பிரச்சினைகளுக்கு இடந்தராது மாறிச் செல்ல வேண்டும். இவ்வாறு மாறிச் செல்லும் வேளையிலேயே பல இடையூறுகளை மாணவர்கள் ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

4. பாட ஆரம்பத்தின் போதும் அல்லது மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையும் போதும் அவர்களைக் கவனமாக அவதானித்தல் வேண்டும். பிச்சினைக்குரிய அறிகுறிகள் தென்படுகின்றனவா என ஆராய வேண்டும். தீவிரமான வாய்ச்சண்டைகள் அல்லது பிச்சினைகள் காணப்பட்டால் அதனைத் தீர்த்து வைத்த பின்னரே பாடத்தைத் தொடங்க வேண்டும் பாடத்தின் போதாவது தமது பிரச்சினைகளை முடித்துவிடுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். பிரச்சினைக்குரிய மாணவர்களை வௌ;வேறு இடங்களில் அமரச் செய்யலாம்.

5. முறையான வகுப்பறை முகாமைத்துவத்தில் தொடர்ச்சியாகப் பின்பற்றக்கூடிய ஒரு ஒழுக்காற்றுத் திட்டத்தை ஆசிரியர் வடிவமைத்துக் கொள்வதும் முக்கியமானது. இத்திட்டத்தில் இன்ன நடத்தைப் பிறழ்வுக்கு இன்ன தண்டனையென மாணவர் முன்கூட்டியே அறிந்திருத்தல் வேண்டும். முதலில் வாய்மொழி மூலக் கண்டிப்பு> இரண்டாம் முறை ஆசிரியருடன் தடுத்து வைப்பு> மூன்றாம் முறை அதிபருக்கு பெற்றோருக்கும் அறிவிப்பு என்ற முறையில் ஒழுக்காற்றுத் திட்டம் இலகுவாகப் பின்பற்றக்கூடிய விதத்தில் அமைய வேண்டும்.

மறக்காமல் இதையும் படியுங்க  நேத்ரன் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்திருந்த பொருளை பார்த்து அலறி அடித்து ஓடிய மனைவி

6. வகுப்பறையில் குழப்பங்கள் ஏற்படுமிடத்து அவற்றை அதேமட்டத்தில் வைத்திருப்பது முக்கியமானது. ஆசிரியருடைய சொந்த விருப்பு வெறுப் புகளுக்கு இடந்தராத முறையில் அக்குழப்பங்கள் கையாளப்படல் வேண்டும். எடுத்துக்காட்டாக இரண்டு மாணவர்கள் உரத்த குரலில் உரையாடிக் கொண்டிருந்தால் அதற்காகக் கற்பித்தலை நிறுத்திவிடாது> குறிப்பிட்ட மாணவரைப் பெயர்சொல்லி அழைக்கலாம் அல்லது அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்கலாம். பாடத்தைத் தவிர்த்துவிட்டு விசாரணையில் ஈடுபடும் பொழுது பாடம் தடைப்படுவதுடன் குழப்பநிலை அப்போதைய மட்டத்தைவிட அதிகரிக்கவும் வாய்ப்புண்டு.

7. சில சமயங்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள சிறு நகைச்சுவையையும் பயன்படுத்தலாம். ஆசிரியரின் அறிவுறுத்தலைக் கவனிக்காது இரண்டு மாணவர்கள் உரையாடி இடையூறு செய்தால் அவர்களை உரையாடி முடிக்குமாறு வேண்டலாம். இதனால் உடனடியாக அவர்கள் உரையாடலை நிறுத்த வாய்ப்புண்டு.

8. ஒரு மாணவர் ஆசிரியருடன் வாதிட முற்பட்டால் அமைதியாக அவரை அவ்விடத்திலிருந்து துரிதமாக வெளியேற்ற முயல வேண்டும். பிற மாணவர்களை இச்சம்பவத்துக்குள் ஈடுபடுத்தாது அதிபருடன் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முயல வேண்டும்.

9. வகுப்பறையில் வன்முறையைப் பயன்படுத்தும் மாணவர் இருப்பின் பிற மாணவரின் பாதுகாப்புப் பிரதானமானது என்பதைக் கருத்தில் கொள்ளவும். இந்நிலையில் பிரரை உதவிக்கு அழைத்தல் மற்ற மாணவரை அவ்விடத்திலிருந்து அகற்றுதல்> இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்வது என்ற பாடசாலை விதிகளைப் பின்பற்றுதல் என்பன கருத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களாகும்.

10. வகுப்பறையில் ஏற்படும் இத்தகைய இடையூறுகள் முக்கியமானவையென ஆசிரியர் கருதுமிடத்து அவை பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துதல் வேறு சந்தர்ப்பங்களில் பயன்தரலாம்.

சில ஆலோசனைகள்

* குழப்பத்திற்கான அறிகுறிகளை இனங்காணும் பழக்கத்தை ஆசிரியர்கள் அனுபவத்தில் பெற்றுக்கொள்ள முடியும். சில அறிகுறிகளை இலகுவாக இனங்காணலாம்.

* பிள்ளைகளைக் கேலி செய்தல் முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பல பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

* நியாயமாகவும் மாறுதலின்றி உறுதியாகச் செயற் படுவதும் வகுப்பறை முகாமைத்துவத்துக்கு மிகவும் அவசியமானது. ஒருநாள் குழப்பங்களை அலட்சியம் செய்துவிட்டு மறுநாள் அவற்றைக் கடுமையாக நோக்கும் ஆசிரியர் உறுதியுடன் செயற்படுபவர் அல்லர். தண்டனைகளைச் சகல மாணவருக்கும் சமமாகவும் நியாயமாகவும் வழங்காதவிடத்து மாணவர்கள் அவரை மதிக்கமாட்டார்கள்.

* ஒரு குழப்பநிலைலைய தீர்த்துவைத்த பின்னர் அதனோடு தொடர்புடைய மாணவர்களை வெறுப்போடு நோக்குவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

* வருட ஆரம்பத்தில் கண்டிப்புடன் கற்பிக்கத் தொடங்கும் பொழுது மாணவர்கள் படிப்படியாக ஆசிரியரின் நன்னோக்கத்தை அறிந்து கொள்வர். நாட்செல்லச் செல்ல ஆசிரியர் சற்று நெகிழ்ச்சியுடன் நடந்து கொள்ளலாம்.

* வகுப்பறையில் மாணவரின் நடத்தைக்கான விதிமுறைகள் தெளிவானதாகவும் முகாமை செய்யக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். ஏராளமான விதிமுறைகளை உருவாக்கினால் அவற்றை மாணவர்கள் பின்பற்றுவது சிரமமாக இருக்கும். அவ்விதி முறைகளை மீறும் மாணவர்கள் எத்தகைய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்.

மறக்காமல் இதையும் படியுங்க  இறப்பதற்கு முன் நேத்ரன் எழுதி வைத்து விட்டு சென்ற கடைசி கடிதம் படித்துவிட்டு தேம்பி அழுத மனைவி

மேற்கூறிய விடயங்களை ஓர் ஆசிரியர் கவனத்தில் கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கைகளை வகுப்பறையில் முகாமைத்துவம் செய்யும் பொழுது> கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவரின் ஈடுபாடு அதிகரிக்கும். கற்பித்தல் கற்றலின் இலக்குகளும் எதிர்பார்த்த மட்டத்தில் அடையப்படுவதற்கான சாத் தியக் கூறுகள் உருவாகும். மாணவரும் ஆசிரியரும் பரஸ்பரம் நம்பிக்கைக்குப் பாத்திரமாகப் பொறுப்புடன் செயற்பாடுவார்கள்.

Shares