கோழி முட்டையை விட காடை முட்டைதான் பெஸ்ட் ஏன்னு தெரியுமா..!

காடை முட்டை மிகவும் சிறியதாகவும் அதன் மேல் பகுதியில் கருமையான புள்ளிகளுடனும் காணப்படும். இந்த முட்டையை பச்சையாகவும், குழம்புவைத்தும் சாப்பிடலாம்.கிராம பகுதிகளில் உள்ள மக்கள் இந்த முட்டையை பச்சையாக குடிப்பார்கள்.

நம்மில் பல பேர் கோழி முட்டையை தான் விரும்பி சாப்பிடுவோம். ஆனால் உண்மையில் காடை முட்டையில் கோழி முட்டையை விட சிறந்தது. ஏனென்றால், ஏராளமான சத்துக்கள் காடை முட்டையில்தான் அடங்கியுள்ளன.
மேலும் காடை முட்டை போன்றே அதன் இறைச்சியிலும் நிறைய சத்துக்கள் உள்ளன. மாட்டன், சிக்கனுக்கு பின் பெரிய ஹோட்டல்களில் காடை இறைச்சிதான் அதிகளவில் விற்பனையாகும்.

காடை முட்டையில் என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன என்பதை பார்ப்போம்

காடை முட்டையில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் கோழி முட்டையில் உள்ளதை விட காடை முட்டையில் அதிக அளவில் காணப்படுகின்றன.

கோழி முட்டையில் 11% புரோட்டீன் உள்ளது என்றால், காடை முட்டையில் 13% புரோட்டீன் இருக்கு.

வைட்டமின் பி1 கோழி முட்டையில் 50% என்றால், காடை முட்டையில் 140% இருக்கின்றது.

புற்று நோயின் வளர்சிதை தடுக்கும் கார்சினோஜெனிக் பொருட்கள் காடை முட்டையில் அதிகம் உள்ளதால் புற்று நோய் உடையவர்கள் இதனை சாப்பிட்டு வர, புற்று நோய் குணமாகும்.

காடை முட்டையை சாப்பிடுவதால் நம் உடம்பில் ஏற்படும் அலர்ஜி மற்றும் ஒவ்வாமை பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.

அல்சர் உள்ளவர்கள் காடை முட்டையை சாப்பிட்டு வந்தால், செரிமான பாதையில் உள்ள காயங்கள் மற்றும் புண்களை ஆறும்.

தினமும் 2 காடை முட்டை வீதம் வளரும் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், அவர்களின் வளர்ச்சி சீராக இருக்கும். உடல் வலிமையுடனும், நோய் தாக்காமல் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள்.

உங்கள் உடலில் இரத்தத்தில் அளவு குறைவாக இருப்பின், காடை முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இரத்த சோகை பிரசினைகள் ஏற்படாது.

கர்ப்பிணிகள் இந்த முட்டையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு சீராக இருக்கும்.

காடை முட்டை நமது மூளையின் செயல்பாட்டினை தூண்டி, ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டினையும் அதிகரிக்கும்.

காடை முட்டை நம் உடலில் உள்ள டாக்சின்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கனிமங்களை நீக்கி, பித்த கற்கள் மற்றும் சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றும்.

இதில் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ரால் பிரச்சினை ஏற்படாது. அதுமட்டுமின்றி உடல் எடையை குறைக்க காடை முட்டையை சாப்பிடலாம்.

காடை முட்டை தினமும் சாப்பிட்டால், நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையடைய செய்து நீரிழிவு, மூச்சுக்குழாய் ஆஸ்துமா மற்றும் காச நோய் போன்ற பிரசினைகள் வராமல் தடுக்கும்.

Shares