விளக்கெண்ணெய்க்கும் சுகப் பிரசவத்திற்கும் இப்படி ஒரு தொடர்பா!!

பெண்களுக்கு பிரசவ காலம் என்பது மிக முக்கியமான காலமாகும். இந்த காலத்தில் நடைபெறும் ஒவ்வொரு செயலும் உடல் மொழியையும் மன மொழியையும் புரிந்து கொண்டு நடைபெறும்.அதனால் தான் மருத்துவர்கள் கர்ப்ப காலம் எளிதாக இருக்க மாலை நேரத்தில் சிறிது தூரம் நடப்பது, கனிவான இசை கேட்பது போன்றவற்றை பரிந்துரைக்கின்றனர்.

நீங்கள் செய்யும் சில சிறிய செயல்கள் உங்கள் கர்ப்ப பையின் சுருங்கி விரிதல் இயக்கத்தை மேம்படுத்தி ஏன் சுகப்பிரசவம் நடக்க கூட வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்குமாம். இது ஒரு இயற்கையான ரீதியில் பிரசவத்தை எளிதுபடுத்தக் கூடிய வேலையாகும்.

40 வாரங்கள் கருவை சுமந்த பிறகு உங்கள் குழந்தையானது முற்றிலும் வளர்ச்சி அடைந்து வெளிவர தயாராக இருக்கும். அந்த நிமிடத்தில் இருந்தே உங்களுக்கு கர்ப்ப பை சுருங்குதல் நடைபெற ஆரம்பித்து விடும். அதே நேரத்தில் உங்களுக்கு இந்த செயல்கள் நடக்கா விட்டால் சில இயற்கை வழிகள் மூலம் பிரசவத்தை தூண்டலாம். சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

1-4 அவுன்ஸ் விளக்கெண்ணெய்யை உங்களுக்கு விருப்பமான ஜூஸில் கலந்து குடித்து கொள்ளுங்கள். இதை நீங்கள் 40 வது வாரத்தில் செய்யும் போது சில மணி நேரங்களில் தொடர்ச்சியாக கர்ப்ப பை சுருங்க ஆரம்பித்து விடும். அடுத்த 12 மணி நேரத்திற்கு பிறகு மற்றொரு முறை பருகுங்கள். விளக்கெண்ணெய் வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்கி கர்ப்ப பை இயக்கத்தை தூண்டி விடுகிறது.

Shares