மக்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது.. பரிசு கொடுத்து அசீமை பாராட்டிய கமல்!

சென்னை : பிக் பாஸ் போட்டியாளரான அசீமுக்கு பரிசை கொடுத்து, மக்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்று பாராட்டினார்.

பிக் பாஸ் சீசன் 6ன் டாப் த்ரீ போட்டியாளர்களாக அசீம் ,விக்ரமன்,ஷிவின் இருக்கின்றனர். மாலை 6 மணி முதல் ஆட்டம் பாட்டத்துடன் பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

அசீம் தான் டைட்டில் வின்னர் என்ற தகவல் கசிந்தாலும், இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வந்துவிடும்.

கிராண்ட் பினாலே

பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், எலிமினேட் ஆகி வெளியில் சென்ற போட்டியாளர்கள் ஸ்டைலாக உடை அணிந்து வந்திருந்தார்கள். அவர்களை வரவேற்ற கமல், உங்களுக்கு வெளியில் மக்களிடம் வரவேற்பு எவ்வாறு இருந்தது என்று கேட்டார். இதற்கு பதில் அளித்த ஜனனி மீண்டும் ஊருக்கு செல்ல முடியாத அளவுக்கு பட வாய்ப்பு வந்து இருப்பதாக கூறினார்.

இதுதான் காரணம்

இதையடுத்து, 3 லட்சத்துடன் வெளியேறிய கதிர், இந்த பணத்தை யாரும் எடுக்க வேண்டாம், இன்னும் பணம் அதிகரிக்கும் என்றார்கள். ஆனால், நான் இதுநாள் வரை இந்த வீட்டில் இருந்ததே பெரிசு என்பதால் எடுத்தேன் என்றார். இதையடுத்து, பேசிய அமுதவாணன், பைனல் வரை வந்து இந்த மேடையில் நிற்க ஆசைப்பட்டேன், ஆனால் பணத்தேவை இருந்ததால், 11,75,000 பணத்தை எடுத்தேன் என்றார்.

3 பேருக்கும் பரிசு

இதையடுத்து,பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களை பார்க்க உள்ளே சென்ற கமல், அவர்களுக்கு தெரியாமல் உள்ளே வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சலசலப்பு, சண்டை, சர்ச்சரவுக்கு மத்தியில் துவண்டு போகாமல் 106 நாட்களை இருந்தது பாராட்டுக்குரியது என்று மூன்று பேரையும் மனதார பாராட்டினார். இதையடுத்து, அசீம், விக்ரமன், ஷிவின் மூன்று பேருக்கும் கமல் ஹாசன் எழுதிய கடிதத்தை ஃபிரேம் போட்டு பரிசாக வழங்கினார். மேலும், மூவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

அன்புத்தம்பி என அசீமுக்கு

அசீமுக்கு கமல் கொடுத்த பரிசில், அன்புத்தம்பி என அசீமுக்கு உங்கள் தளராத தன்முனைப்பும் தன்னம்பிக்கையும் பாராட்டுதலுக்கு உரியவை, அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இறுதி இலக்கை எட்டி இருக்கிறீர்கள். தவறுகளில் இருந்து திருத்திக் கொண்டு உங்களை மாற்றிக் கொள்ள முயற்சித்திருக்கிறீர்கள். மக்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. அசீம் தன்னை அசீமாக வெளிப்படுத்திக் கொண்டதற்கு சிலர் கொடுத்த பரிசு இது. நீங்கள் உழைத்து உயர வாழ்த்துகள் என கமல் பாராட்டி இருந்தார்.

கொண்டாடும் ரசிகர்கள்

மறக்காமல் இதையும் படியுங்க   அடுத்தவனுடன் ஓடிப்போன மனைவிக்கு கணவன் தந்த பரிசு

பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து கொண்டு இருக்க, அசீமுக்கு முதல் இடமும், விக்ரமனுக்கு இரண்டாவது இடமும், ஷிவினுக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், இணையத்தில் அசீமின் ஆர்மிகள் ட்விட்டரை தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Shares