அழகு என்பது பெண்களுக்கு மட்டும்தானா…! என்ற கேள்வி ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கத்தான் செய்கிறது. அழகு என்பதில் எப்போதும் வேறுபாடு இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். எவ்வாறு ஒரு பெண் தன்னை அழகு செய்து கொள்கிறாளோ, அதே போன்று ஒரு ஆணும் அழகு செய்து கொள்ளலாம்.
அனைத்திலும் சமத்துவம் பேசும் நாம் ஏன் இதில் பேசுவதில்லை..? பெண் மட்டும்தான் அழகு செய்ய வேண்டும் என்கிற பழைய கால பேச்சுகள் எல்லாம் மலையேறி போயிற்று. இன்று ஆண்களும் தங்கள் முகத்தை அழகு செய்ய எண்ணுகிறார்கள்.
முகம் மட்டுமின்றி தங்கள் முழு உருவத்தையும் மற்றவரிடம் அழகாக காட்ட வேண்டும் என விரும்புகிறார்கள். இந்த எண்ணம் முற்றிலும் நியாயமானதே. ஆண்களின் அழகிற்கு அழகு சேர்க்க பல வகையான வேதி பொருட்கள் இன்று சந்தையில் வந்து குவிந்து கொண்டே இருக்கிறது.
ஆனால் அவை எல்லாம் ஆண்களின் அழகை கெடுத்துவிடும். அத்துடன் பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். இவற்றிற்கு மாறாக ஆண் பெண்களின் அழகை இயற்கை வழியாக அழகு படுத்தும் ஆயர்வேத அழகு குறிப்புகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.