அடமுந்தானைமுடிச்சு படத்துல வந்தது ஆண் குழந்தை இல்லையா?? இந்த பிரபல நடிகை தானா அது?? இதோ பலருக்கும் தெரியாத செய்தி!!

தமிழ் சினிமாவில் மிக பெரிய ஒரு இயக்குனராக இருந்து தமிழ்சினிமா உலகில் அந்த காலத்தில் இருந்தே இன்று வரை இருந்து வருகின்றார் பாக்கியராஜ் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஒரு பக்கம் இயக்குனராக இருந்து வந்தாலுமே கூட அதே சமயம் நல்ல நடிகருமாக பிரபலமாக ஆனார். அந்த வகையில் 1983 ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை, தீபா, கே.கே.செளந்தர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் வெளியாகி இருந்தது.

அந்த திரைப்படத்தில் பாக்யராஜ் நகரத்தில் இருந்து கிராமத்திற்கு ஒரு பல்ல ஆசிரியராக ஒரு கைகுழந்தையுடன் வந்து இருப்பார். அப்படி வந்திருக்கும் அந்த கைகுழந்தையாக நடித்து இருந்தவர் யார் தெரியுமா. இப்போது பலருமே அதிகமாக பார்த்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ப.ட்.டை.யைக் கிளப்பும் சுஜிதா தான்.

அவர் பிறந்தது எல்லாம் மலையாள குடும்பத்தில் தான். மேலும் இவரின் தந்தை பெயர் மணி தாயின் பெயர் ராதா. குடும்பம் சினிமாபின்னணி கொண்ட குடும்பம் என்பதால் எளிதாக சினிமா பக்கமாக வந்துவிட்டார். சுஜிதா 2012ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு.

கேரளாவில் பிறந்து இருந்து இப்போது தமிழ் சீரியலில் நடித்து வரும் இவர் இதற்க்கு முன்பே தெலுங்கில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதே போல சத்யராஜ் நடிப்பில் வெளியான பூவிழி வாசலிலேயே படத்திலும் நடிகை சுஜிதா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் முந்தானை முடுச்சு, பூவிழி வாசலிலே இரண்டு படத்திலும் நடிகை சுஜிதா ஆண் குழந்தையாக தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *