பிக்பாஸ் வீட்டை விட்டுவெளியேறிய பின் தனலெட்சுமி சொன்ன வார்த்தை! வியந்து பார்த்த ஹவுட்ஸ்மேட்ஸ்

பிக்பாஸ் சீசன் 6 இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்த வாரம் தனலட்சுமி வீட்டை விட்டு வெளியேறிய போது அசீம் பற்றி தனலட்சுமி பேசியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6

பிரபல தொலைக்காட்சியொன்றில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சி கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரை சுவாரஸ்யம் குறையாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போட்டியில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது 10 போட்டியாளர்களுடன் நகர்ந்துக் கொண்டிருந்தது.
வெளியேற்றப்பட்ட தனலட்சுமி

ஆரம்ப வாரம் முதல் ஒவ்வொரு வாரமும் வாக்குகளின் அடிப்படையில் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி வெளியேறிய நிலையில் 10 போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் விளையாடி வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் தனலட்சுமி வெளியேற்றப்பட்டார்.

ரசிகர்களின் மத்தியில் தொடர்ந்து நன்றாக விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது தனலட்சுமி வீட்டை விட்டு வெளியே சென்றது யாரும் எதிர்பார்க்காத ஒரு விடயம் தான்.

இவர் வெளியேற்றப்பட்டது நியாயமில்லை என சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
அசீம் பற்றி பேசிய தனலட்சுமி

வீட்டை விட்டு வெளியேறிய தனலட்சுமி கமல் அருகே இருக்கும் போது பேசிய விடயம் அசீமிற்கு ஆதரவளிக்கும் வகையில் இருந்தது.

அசீம் அண்ணா, நான் பக்கத்துல இருக்கும் போது உங்க கண்ணு கலங்குனத பாத்தேன். நீங்க வெளில தான் ஓகே ஓகேன்னு பண்றீங்க. எனக்கு அது புரியுது.

அது எதையுமே மனசுல எடுத்துக்காம இதுக்கு மேல விளையாடுறத புதுசா விளையாடுங்க. வெளில நீங்க இருக்குற கேரக்டரையே உள்ள வெச்சு நீங்க விளையாடுங்க. அது தப்பே கிடையாது. அது கேம் தான்” என அசிமிடம் அறிவுறுத்தினார். அப்போது, “தைரியத்தை விட்டுராதீங்க தனா” என விக்ரமனும் தனலட்சுமியிடம் கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது எலியும் பூனையுமாக அடித்துக் கொண்ட அசீம் மற்றும் தனலட்சுமி இவ்வாறு அசீம் குறித்து பேசுவது சற்று வியப்பாகவே இருந்தது.

Shares