மகளுக்கு எமனாக மாறிய தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சிவகங்கையில்..

அரசினம்பட்டியில் உடல்நலம் பாதித்த 5 வயது மகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலையை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டியில் வாழ்ந்து வருபவர் ஜெயராஜ். இவர் கொத்தனார் பணி செய்து வருகிறார். இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும் 5 வயது மகளும் இருந்தனர்.

ஜெயராஜின் குழந்தை ஆசனவாய் துவாரம் இல்லாமல் பிறந்ததின் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மதுரையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று குழந்தையின் உடல் நலம் பார்த்து பரிசோதனை செய்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்த சங்கீதா திடீரென இரவில் தனது மக்களை துண்டால் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு சேலையால் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

பின்னர் இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்த ஜெயராஜ் தனது மனைவியும் மகளும் இறந்து கிடந்ததை கண்டு சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சிங்கம்புணரி போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தாயும் மகளும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் கதறி அழுத வண்ணம் உள்ளனர். இந்த இரட்டை மரணத்தால் கிராம மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மகளின் துயரத்தை பார்க்க முடியாமல் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறேதேனும் காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Shares