சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பேரிச்சை சாப்பிட்டால் என்ன நடக்கும்! ஒரு நாளைக்கு எத்தனை சாப்பினும் தெரியுமா?

பொதுவாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பான எதையும் சாப்பிடுவதற்கு பயந்து நடுங்குவார்கள்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இனிப்பாக உள்ள பேரிச்சம்பழம் சாப்பிடலாம்.

அனைத்து இனிப்புகளையும் தவிர்க்க வேண்டியது இல்லை.

பேரிச்சம்பழத்தில் எக்கசக்க சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இதில் இரும்புச்சத்து, அண்டிஆக்சிடன்ட், அதிக அளவில் உள்ளது. மேலும், நார்ச்சத்து கொண்ட பழமாக இருப்பதால் எடை குறைக்கவும் உதவி புரியும்.

பொதுவாக நார்ச்சத்து அதிகமுள்ள உணவை தான் நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடவேண்டும்.

அப்படி பார்க்கையில் பேரிச்சை பழங்களில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. தினமும் இரண்டு முதல் மூன்று பழங்கள் மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மை விளைவிக்கும்.

ஆனால் பேரீச்சம்பழங்களில் சத்துக்கள் நிறைந்து இருந்தாலும் அதில் கலோரிகள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

எனவே தேவையான அளவு உடற்பயிற்சி செய்து கலோரிகளை கரைத்து விட்டால், நீங்கள் பேரிச்சபழம் சாப்பிடுவதில் எந்த பிரச்சினைகளும் உங்களுக்கு ஏற்படாது.  
எத்தனை சாப்பிடலாம்?

தினமும் இரண்டு முதல் மூன்று பழங்கள் மட்டுமே சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த நன்மை விளைவிக்கும்.

Shares