தாய் கண் முன்னே சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் ஆல்வின் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிருத்திகா என்ற மாணவி தனது தாயுடன் வழக்கம் போல், பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த மினி வேன் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருத்திகா மீது மினி வேன் மோதியதில் கிருத்திகா படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு சென்றனர்.

பலத்த காயம் அடைந்த கிருத்திகாவிற்கு அங்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் இல்லாததால், உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு கிருத்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய, மினி வேன் ஓட்டுநர் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டு விட்டு தப்பி சென்று விட்டார்.

இந்த சாலையானது படப்பை வாலாஜாபாத் வழியாக செங்கல்பட்டு செல்லும் மிக முக்கியமான சாலை இந்த சாலையில், முறையான சிக்னல் எச்சரிக்கை பலகைகள் என எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லை எனவும்,

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மிகப்பெரிய தனியார் நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை சாலையோரங்களில், நிறுத்தி விடுவதாலும், இந்த மாதிரியான விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கிறது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும், கிருத்திகா உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, வேன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அருகில் ஏதாவது சிசிடிவி காட்சிகள் இருக்கிறதா ? வண்டியை முந்தும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.

Shares