பிக்பாஸ் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அசீம் ….. பேச்சு மூச்சு இல்லாத நிலையில் பதறிப்போன சகபோட்டியாளர்கள் … வெளிவந்த வீடியோ ….

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி ஏறக்குறைய எட்டு வாரங்கள் முடியபோகும் நிலையில் இந்த சீசனில் முதல் வாரத்தில் இருந்தே வீட்டில் துளியும் சண்டைகளுக்கும் வம்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு போட்டியாளர்கள் மத்தியில் போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் துவக்கத்தில் இருந்தே பல சர்ச்சைகளில் சிக்கி வரும் அசீம் எலிமினேட் ஆகாத வாரங்களே இல்லை எனலாம் இருப்பினும் தனது மக்கள் மத்தியில் அவர் தொடர்ந்து காப்பற்றபட்டு வரும் நிலையில் வீட்டில் தனித்து தனியாக தனது கேமை ஆடி

வருகிறார் அசீம். சொல்லப்போனால் பிக்பாஸ் வீட்டில் இவர் சண்டை போடாத ஆட்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு அனைவரிடமும் வம்பு இழுத்து வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாசில் ஆதிவாசி மற்றும் ஏலியன் டாஸ்க் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதையடுத்து டாஸ்க் தொடங்கியதில் இருந்து இரு தரப்பினரிடமும் வாக்குவாதமும் சண்டையுமாக இருந்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் நேற்றைய எபிசோடில் ஆதிவாசியாக அசீம் மற்றும் அவரது

அணியினர் கார்டன் ஏரியாவில் இருக்கும் நிலையில் லிவிங் ஏரியாவில் இருக்கும் ஏலியன் அணியினர் அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் அவர்கள் சாப்பிட்டு விடுகின்றனர். இதையடுத்து வீட்டிற்கு வெளியே இருக்கும் ஆதிவாசி அணியினருக்கு சரியாக உணவு கிடைக்காமல் தவித்து வந்த நிலையில் அசீம் தொடர்ந்து அனைவரிடமும் வாக்குவாதம் சண்டையில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு அதிக டென்சன், கோபம், பசி போன்றவற்றால் உடலில் வலு குறைந்த நிலையில் இறுதியில்

மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். இதனைதொடர்ந்து இதைபார்த்த சக போட்டியாளர்கள் உடனே அவரை பார்த்து அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரை மெடிக்கல் ரூமுக்கு அனுப்பிய நிலையில் அங்கு அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு வருகிறது.இப்படி இருக்கையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் அசீம் தான் வீட்டுக்கு போக வேண்டும் என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என கேமரா முன் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……

மறக்காமல் இதையும் படியுங்க  சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்தது என்ன? தற்கொலை கடிதத்தில் வெளியான உண்மை
Shares