தமிழ்ப்பெண்கள் அழகுதான். அதிலும் பாவாடை, தாவணியில் வலம்வரும் தமிழ் இளம்பெண்கள் அழகோ அழகுதான். ஆனால் கேரளத்துப் பெண்களை பார்த்துவிட்டால் நம்மூரு பெண்கள்கூட அடேங்கப்பா என சொக்கிப் போகிறார்கள். அதிலும் தென்னிந்தியப் பெண்களை விட நன்கு கலராக இருக்கும் வட இந்தியப் பெண்கள் ஒருவகை அழகு!
பெண்கள் இன்று சகலதுறைகளிலும் கோலோச்சி வருகின்றனர். வீட்டு சமையலறைத் தொடங்கி, சாப்ட்வேர் கம்பெனி வரை இன்று பெண்களே பிரதானமாக இருக்கின்றனர். அதிலும் அழகான பெண்கள் சாதாரணமாக எதாவது செய்தால் கூட நம் நெட்டிசன்கள் அதை டிரெண்டிங் ஆக்கிவிடுகின்றனர்.
இங்கே அப்படித்தான் கேரளப் பெண்கள் தங்கள் கல்லூரியில் கல்லூரியை முடித்துச் செல்லும் நினைவுக்காக ஒரு புகைப்படம் எடுக்க போஸ் கொடுக்கின்றனர்.
அந்த போஸில் நம் பாரம்பர்ய உடையான சேலையில் நூறு பெண்கள் வரை நிற்கிறார்கள். அவர்களுக்கு கற்றுக்கொடுத்த ஒரே ஆண் ஆசிரியர் கடைசியில் வந்து, மம்முட்டி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு வாசகத்தைச் சொல்கிறார்.
அடுத்த நொடியில் அனைவரும் செம கெத்தாக கால் போல் கால் போட்டு அமர்கின்றார்கள். இதை இணையத்தில் 18 லட்சம் பேரை வியக்க வைத்துள்ளது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.