காலையில் தண்ணி ஊத்துன சாதம் மதியம் சாம்பார் சாதம் இரவு சாதம் “மூன்று” வேலையும் வடித்த சாதம் சாப்பிட்டால் உடலில் வரும் நன்மை…!!
இந்த தலைமுறைக்கு அரிசி சோற்றின் மகிமையே தெரியவில்லை,சதா சர்வ நேரமும் பீசா, பர்கர் என பாஸ்ட்புட் கலாச்சாரத்திற்கு நகர்ந்து விட்டனர்,ஆனால் நம் பாரம்பர்ய உணவான அரிசி சாப்பாட்டில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன.

முன்பெல்லாம், தினமும் வீட்டில் அரிசி சாப்பாடு இருக்கும். ஆனால் இப்போது நாகரீகம் என்னும் பெயரில் ஒருபக்கம் டிபன் கலாச்சாரத்துக்கு மாறிவிட்டோம். இன்னொரு பக்கம் மருத்துவர்களோ சர்க்கரை நோயை முன்னிறுத்தி பயம்காட்டி அரிசி உணவைத் தவிர்க்கக் கோருகின்றனர்.

ஆனால் ஊட்டச்சத்து நிபுணர் ருஜீதா திவேகர்‘நம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த அரிசியில் இருக்கும் குணங்கள் உதவும் என்கிறார்,மேலும் இதுகுறித்து அவர் தொடர் ஆய்வு செய்ததில்,இன்று பலரும் உடல் எடையை கூட்டிவிடும் எனச் சொல்லி அரிசி உணவைத் தவிர்க்கின்றனர்.

ஆனால் அரிசி ப்ரீ பயாட்டிக் தானியம் அரிசி நம் பசிக்கு மட்டும் உணவாக இல்லாமல் உடலில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளுக்கும் உணவாக இருக்கிறது,அரிசியோடு பலவகை காய்கறிகள், பருப்பும் சேர்த்து சாப்பிடும்போது உடலுகுத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும் பொதுவாகவே அரிசியை அதன் வண்ணத்திற்காக அதாவது பார்க்கவே வெள்ளை வெளீர் என இருக்க வேண்டும் என்பதற்காக பாலீஷ் செய்வார்கள்,ஆனால் பாலீஷ் செய்யப்படாத அரிசியில் விட்டமின் பி அதிகம் இருக்கும்.

வயது வித்தியாசம் இன்றி ஈஸியாக இது ஜீரணமும் ஆகிவிடும் அரிசியில் இருந்து சோறுவடித்து மறுநாள் சாப்பிடும் பழைய கஞ்சி உடலுக்கு ரொம்பவும் நல்லது,இதில் ஏராளமான நமை செய்யும் பாக்டீரீயாக்கள் உள்ளது,அரிசி வடித்த தன்ணீரை தலைக்கு இயற்கை கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம் அரிசியில் கிடைக்கும் தவிடும் மருத்துவ குணம் கொண்டது கூடவே மூன்று வேளையும் சோறு சாப்பிட்டாலும் அளவாகச் சாப்பிட்டால் அதன் மூலம் உடலுக்கு ஆரோக்கியமே’ என்று விளக்கியுள்ளார் அப்புறம் என்ன மக்களே இனி சோறு சாப்பிடுங்,சுகமா இருங்க..!