Astroyogi

30 ஆண்டுகளுக்கு பின் கும்பம் செல்லும் சனி! 12 ராசிக்காரர்களுக்குமான அதிர்ஷ்ட பலன்கள்

சனி இதுவரை மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார்.

ஆனால் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.57 மணிக்கு மகரத்தில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார்.

பின் இந்த ராசியில் இருந்து 2022 ஜூலை 12 ஆம் தேதி பின்னோக்கி நகர்ந்து மீண்டும் மகர ராசிக்கு செல்லவிருக்கிறார்.

இப்போது 2022 சனி பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்களைக் காண்போம்.

மேஷம்

இக்காலத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு, வேலை கிடைக்கும் அல்லது சொந்தமாக தொழில் தொடங்குவதற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

ரிஷபம்

தொழில் வாழ்க்கையில் சில நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். நீங்கள் விரும்பும் வேலை கிடைக்கும். பணியிடத்தில் துணை அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பைப் பெறுவீர்கள். ஒட்டுமொத்தமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.

மிதுனம்

நீண்ட காலமாக எதிர்பார்த்த வேலைகளில் சிறு மாற்றங்களைக் காணலாம். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பார்கள். வேலை விஷயமாக பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.வருமானத்தை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

கடகம்

இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். தொழில் ரீதியாக, உங்கள் திட்டங்கள் தோல்வியடைவதால் கவனச்சிதறல் மற்றும் மன அழுத்தத்தை உணரக்கூடும்.

சிம்மம்

பணிபுரிபவர்களுக்கு நன்றாக இருக்கும். இக்கால கட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனை மற்றும் சிறந்த முடிவுகளால் நல்ல பலனைப் பெறுவீர்கள். திருமணமாகாமல் வரன் தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும்.

கன்னி

இக்காலத்தில் நல்ல ஓய்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் மற்றும் கடின உழைப்பின் காரணமாக வருமான உயர்வு பெற வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலம் சிறந்தது.

துலாம்

படிப்பிற்காக சொந்த ஊரை விட்டு வெளியேறத் திட்டமிடுபவர்களுக்கு விரும்பிய பல்கலைகழத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் ஆர்வம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான உங்கள் முயற்சிகள் வெற்றியைத் தரும்.

விருச்சிகம்

மாணவர்களின் படிப்பில் சில தடைகள் ஏற்படும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சில மந்தமான நிலையை சந்திக்க நேரிடும். கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து முழுமையாக விடுபடுவீர்கள்.

தனுசு

இந்த ராசிக்காரர்கள் வேதத்தைக் கற்றுக் கொள்வதில் அதிக நாட்டம் கொள்வார்கள். இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சனி பகவான் குழந்தைகளின் வீட்டைப் பார்ப்பதால் கருத்தரிக்கத் திட்டமிடுபவர்களுக்கு காலமும் சாதகமாக இருக்கும். மேலும் இந்த ராசிக்காரர்கள் தங்களின் பொழுதுபோக்குகள் மற்றும் ஆர்வங்களை தொழிலாக மாற்ற நீங்கள் திட்டமிடலாம்.

மகரம்

குடும்பத் தொழிலில் உள்ளவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். உங்கள் வேலையில் சில நல்ல லாபங்களையும் ஆதாயங்களையும் பெறுவீர்கள். மேலும் தடைப்பட்ட வளங்களில் இருந்து திடீரென்று ஆதாயத்தைப் பெற வாய்ப்புள்ளது.

கும்பம்

திருமணமானவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணையுடனான புரிதல் மேம்படும். தொழிலில் முன்னேற்றத்திற்கான சில நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். சில சமயங்களில் சோம்பேறியாக உணரக்கூடும். ஆனால் இறுதியில் வெற்றி பெற கடினமாக உழைப்பீர்கள். முக்கியமாக இந்த காலத்தில் உங்கள் கடந்தகால முயற்சிகளின் பலனைப் பெறுவார்கள்.

மீனம்

சில நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். செலவுகள் வருமானத்தை விட அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சில உடல்நலக் கவலைகளை சந்திக்க நேரிடலாம். முக்கியமாக உங்கள் தூக்கம் பாதிக்கப்படலாம். இக்காலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே நடக்கும் போது கவனமாக இருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares