இந்நிலையில்தான் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 35 வயதான உதய வள்ளி அடிக்கடி சிறுவனுக்கு பா.லி.யல் தொ.ல்.லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் உதயவள்ளியால் தான் சந்திக்கும் பிரச்சினை குறித்து சிறுவன் பெற்றோரிடம் கூறினார்,
13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த 35 வயது பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை 1000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பெரும்பாலும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆண்களே போக்சோ சட்டத்தில் கைதாகி வரும் நிலையில் 35 வயது பெண் ஒருவர் போக்சோவில் கைதாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் பெண் வித்தியாசம் இன்றி பாலியல் வன்கொடுமைகள் பரவலாக அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் பெண்களே பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர் என்பதை மட்டுமே வெளியில் தெரிகிறது. இதே அளவுக்கு ஆண்களுக்கும் பாலியல் சீண்டலுக்கு ஆட்படுகின்றனர் என்பதை பலரும் அறிவதில்லை, அது பெரும்பாலும் வெளியில் தெரிவதுமில்லை.
ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில சம்பவங்கள் மட்டும் வெளிச்சத்துக்கு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழசெவல்பட்டி அருகே உள்ள ஆவனி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் உதய வள்ளி (35) இவரது வீட்டுக்கு அருகே 13 வயது சிறுவன் வசித்து வருகிறார்.
இந்நிலையில்தான் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 35 வயதான உதய வள்ளி அடிக்கடி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் உதயவள்ளியால் தான் சந்திக்கும் பிரச்சினை குறித்து சிறுவன் பெற்றோரிடம் கூறினார், இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அது குறித்து உதவள்ளியிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததான். இதனால் போலீசார் சந்தேகத்தின் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதற்கான வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதில் உதய வள்ளி மீதான குற்றம் உறுதியான நிலையில், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 13 வயது சிறுவனுக்கு 35 வயது பெண் பாலியல் தொல்லை கொடுத்து சிறை தண்டனை பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.