அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன மற்றும் சில கிரகங்கள் வக்ர நிவர்த்தி அடைகின்றன.
கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாக இருந்தாலும், சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்த மாதமாக இருக்கும்.
இப்போது அக்டோபர் மாத கிரக நிலைகளால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். இதன் விளைவாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் செய்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிலர் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் இம்மாதத்தில் முதலீடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். மேலும் நிதி பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அக்டோபர் மாதகிரக நிலைகளால் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதிக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பயணத்தின் போது கவனமாக இருங்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியினர் இம்மாதத்தில் தேவையற்ற செலவுகளை அதிக செய்ய நேரிடும். பண இழப்பிற்கு அதிக வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மறுபுறம் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் மாணவர்கள் படிப்பில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் எந்தவித மாற்றங்களையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.