சண்டையிட்டு ஸ்டேஷன் படியேறிய வயதான தம்பதி…. சிங்கம் சூர்யா பாணியில் சேர்த்து வைத்த போலீஸ் நெகிழ்ச்சி!!

கணவன் மனைவி இடையேயான சண்டைக்கு வயது என்பது ஒரு தடையே இல்லை. சிறு சிறு பிரச்னைகளும் அதன் பிறகு ஒரு ஒருவர் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் சமாதானங்களும் உலகெங்கிலும் நடைபெறுவதே.

ஆனால் சில வேடிக்கையான சமாதானங்களும், நெகிழ்ச்சியான சமாதானங்களும் நடைபெறுவதும் வாடிக்கையே.

அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்தில் வைத்து போலிஸாரால் மூத்த தம்பதியர் சமாதான செய்யப்பட்ட காணொலிதான் தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.

அதன்படி, கொண்டா நகரத்தை அடுத்த காட்ராபஸார் பகுதியைச் சேர்ந்த சுமார் 75 வயதுடைய தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது.

இருவருக்கும் இடையே ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் அந்த பெண்மணி கொண்டா நகர போலிஸாரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் அவர்களை சமாதானம் செய்து இனி இருவரும் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது எனக் கூறியதோடு இனிப்பு வாங்கிக் கொடுத்து ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட செய்திருக்கிறார்கள்.

அதனையடுத்து தம்பதியர் இருவரும் பரஸ்பரமாக இனிப்பு ஊட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். இந்த நிகழ்வு வீடியோவாக பதிவு செய்யப்பட்டதோடு சச்சின் கெளசிக் என்ற காவல்துறை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இதுவரையில் அந்த வீடியோவை எட்டு லட்சத்துக்கும் மேலானோர் பார்த்துள்ளதோடு கிட்டத்தட்ட ஏழாயிரம் பேர் பகிர்ந்திருக்கிறார்கள்.

Shares