சர்ப்ப தோஷம் பாம்பை அடிப்பதனால் ஏற்படுகிறது என்பது உண்மையா? நீங்கள் அறியாத மர்மங்கள்

பொதுவாக பாம்பை அடிப்பவர்களுக்கு சர்ப்ப தோஷம் ஏற்படும் என்பார்கள். அப்படியாயின் சிலர் பாம்பை பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஆனால் அவர்களுக்கும் சர்பம் சம்பந்தப்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் காணப்படும்.

இப்படியான தோஷங்கள் எப்போதோ, என்றோ எமது முன்னோர்களோ அல்லது நாம் செய்த பாவம் தான் எமது வம்சத்தை பின் தொடர்கிறது.

இதில் ஒன்றாக தான் சர்ப்ப தோஷம் பார்க்கபடுகிறது. மேலும் சர்ப்ப தோஷம் எதனால் உண்டாகிறது? என்பது பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சர்ப தோஷத்தை ஏற்படுத்தும் பாவங்கள்

சர்ப்ப தோஷம் பாம்பை அடிப்பதனால் ஏற்படுகிறது என்பது உண்மையா? நீங்கள் அறியாத மர்மங்கள் | Sarpa Dosha

சர்ப தோஷமானது, பொறாமையால் அடுத்தவர்களின் குடியை கெடுப்பது, தம்பதிகளை பிரிப்பது, கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்களை ஏமாற்றுவது, திருடுவது, வைத்தியம் தெரியாமல் பொய் வைத்தியம் செய்வது, வதந்தி பரப்புவது, கலப்படம் செய்வது, சொத்தை அபகரிப்பது, பசு வதை செய்வது, பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுவது போன்ற பாவங்கள் செய்பவர்களுக்கு ஏற்படும்.

இது போன்று பாவ செயல்கள் செய்பவர்களுக்கும், அவர்களுடைய சந்ததியினருக்கும் பாவத்தில் பங்கு கிடைக்கும்.

அந்த வகையில் சர்ப்ப தோஷம் இரண்ட வகைப்படுகிறது.

சர்ப்ப தோஷம்
கால சர்ப்ப தோஷம்

இதில் கால சர்ப்ப தோஷம் பரம்பரை பரம்பரையாக பின் தொடர்கிறது. இந்த தோசம் உள்ளவர்களை ராகு, கேது ஆகிய இரண்டு பாவ கிரகங்களும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மற்றும் பூமாதேவியை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவர்கள் பூமாதேவியின் சாபத்தை பெற்று இது போன்ற தோஷங்களுக்கு உள்ளாவார்கள்.
தோசத்திலிருந்து விடுபெற என்ன செய்ய வேண்டும்?

சர்ப்ப தோஷம் பாம்பை அடிப்பதனால் ஏற்படுகிறது என்பது உண்மையா? நீங்கள் அறியாத மர்மங்கள் | Sarpa Dosha

குறிப்பிட்ட நாட்களில் தொடர்ந்து ராகுவையும் கேதுவையும் வணங்கும் பொழுது செய்த பாவத்திலிருந்து விமோசனம் கிடைக்கிறது.

மேலும் பாவச் செயல்களில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பரிகாரங்கள் செய்வதாலும் தோசங்கள் கழிக்கபடுகிறது.

Shares