இந்த இரண்டு சிறுவர்களுமே தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாம்…!! யார் என்று தெரிகிறதா…? நீங்களே பாருங்க. சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவர் இயக்குனர் மட்டுமின்றி திரைப்பட நடிகர், பின்னணி பாடகர், கதை ஆசிரியர் என ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் இவர் எழுதிய கதை நடித்த நடிப்பு பாடிய பாடல் என அனைத்துமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இவருக்கு புகழ் சேர்க்கப்பட்டுள்ளது.

இவர் சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை வைத்து சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028- II போன்ற திரைப்படங்களை உருவாக்கியுள்ளார்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகிய மாநாடு படம் இவர் இயக்கத்தில் வெளியானது தான்.

வருடைய உடன்பிறந்த சகோதரர் பிரேம்ஜி ஆவார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு போலவே பல திறமைகளை உள் வைத்துள்ளார். இவரும் முன்னணி நடிகராவார். இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இவர் தனது காமெடி நடிப்பின் மூலம் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இன்று வரை இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார்.

இவர்கள் இருவருமே இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்கள் ஆவார். சமீபத்தில் இணையதளத்தில் நடிகர் நடிகைகள் தனது சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இவர்களும் தனது சிறு வயது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். அதை பார்த்து ரசிகர்கள் இந்த இரண்டு குழந்தைகளும் இவர்கள்தானா என வியந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *